AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO: குட் நியூஸ்! இனி அவசர தேவைகளுக்கு ரூ.5 லட்சம் வரை பெறலாம்!

EPFO Auto Claim : ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), அவசர தேவைகளுக்காக உறுப்பினர்கள் தங்களது பணத்தை விரைவில் பெறும் முறையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இதன் உச்சவரம்பு ரூ.1 லட்சம் முறையில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

EPFO: குட் நியூஸ்! இனி அவசர தேவைகளுக்கு ரூ.5 லட்சம் வரை பெறலாம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Jun 2025 15:03 PM IST

இபிஎஃப்ஓ (EPFO – Employees’ Provident Fund Organisation) என்பது இந்திய தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய நிதி திட்டத்தை நிர்வகிக்கும் மத்திய அரசு அமைப்பாகும். இதில் பணியாளர்களும், நிறுவனங்களும் ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பங்களிப்பு செலுத்துகின்றனர். இது ஓய்வு பெற்ற பிறகு அல்லது அவசர தேவைகளுக்காக பணியாளர்கள் பணத்தை பெற உதவும். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மான்சூக் மாண்டவியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இபிஎஃப்ஓவில் தற்போது உள்ள ஆட்டோ செட்டில்மென்ட் முறையின் (Auto-Settlement) வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது, பிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்களது பிஎஃப்ஓ பணத்தை அவசர தேவைகளுக்காக விரைவாகப் பெற உதவுகிறது. முன்னதாக இந்த ஆட்டோ சென்டில்மென்ட் செய்யும் முறை கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் அறிமுகமாகியது. இந்த புதிய முடிவை சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்றுள்ளனர். மேலும் ரூ. 5 லட்சம் வரை ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் பணம் வழங்கப்படுவது மக்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு அதிகரித்திருப்பது குறித்து அமைச்சர் மான்சூக் மாண்டவியா அறிவிப்பு

இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 19.14 லட்சம் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இதில் கடந்த மார்ச் 2025, விட 31.31 சதவிகிதம் அதிகம். ஏப்ரல் 2024-இன் ஒப்பீட்டில் 1.17 சதவிகிதம் அதிகமானது. அதில், 18-25 வயதுக்குள் உள்ளவர்கள் 4.89 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது புதிய உறுப்பினர்களில் 57.67 சதவிகிதம் ஆகும். இது வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதையும், பிஎஃப்ஓ பற்றிய விழிப்புணர்வும் மேம்பட்டிருப்பதையும் காட்டுகிறது. இதில் கடந்த ஏப்ரல்,  2025, மாதத்தில் மட்டும் 15.77 லட்சம் பேர் மீண்டும் பிஎஃப்ஓ திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இது நிறுவங்களின் வலுவான மீண்டும் சேர்க்கும் முயற்சிகளை சுட்டிக்காட்டுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம்

இந்த பிஎஃப்ஓ வளர்ச்சியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது மகாராஷ்டிரா மாநிலம், வேலை வாய்ப்பு தரும் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது. பிஎஃப்ஓவின் ₹5 லட்சம் வரை தானாக PF க்ளெயிம் செட்டில்மெண்ட் செய்வது, பணியாளர்களுக்கு விரைவான நிதி ஆதரவை உறுதிசெய்யும் ஒரு முன்னோடியான நடவடிக்கை. இது அரசு ஊழியர் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நேர்த்தியான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Follow Us