Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

EPFO: பிஎஃப் பணம் எடுத்துவிட்டீர்களா? பென்சன் தொகை பாதிக்குமா?

EPF-EPS Explained : பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்களை அவசர காலங்களில் பணம் எடுக்க அனுமதிக்கிறது. ஆனால் பிஎஃப் பணம் எடுப்பதால் எதிர்காலத்தில் பென்சன் தொகையில் பாதிப்பை ஏற்படுத்துமா என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்த கட்டுரையில் பென்சன் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO: பிஎஃப் பணம் எடுத்துவிட்டீர்களா? பென்சன் தொகை பாதிக்குமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 17 Jun 2025 18:27 PM

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) திட்டத்தில் அவசர காலங்களில் பணம் எடுத்துக்கொள்ள அது வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. உதாரணமாக பிஎஃப் தொகையை எடுத்துக்கொண்டால் அது பென்சன் தொகையை பாதிக்குமா என்பது பலரது சந்தேகமாக இருக்கும். பலருக்கும் இபிஎஃப்ஓவின்  பென்சன் திட்டம் (Employees’ Pension Scheme) உடன் தொடர்ந்து செயல்படும் என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். பென்சன்  தொகை நேரடியாக உங்கள் கணக்கில் வராது. எனவே நாம் பிஃப் தொகையை எடுத்துக்கொண்டால் அது எதிர்காலத்தில் நம் பென்சன் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கத் தேவையில்லை. பென்சன் தொகை தொடர்ந்து நமது கணக்கில் வரவு வைக்கப்படும். சில நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் அதை திரும்பப் பெறவும், புதிய நிறுவனத்துக்கு மாற்றவும் முடியும். மணி கண்ட்ரோலில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் இபிஎஃப் திட்டத்துக்கும் இபிஎஸ் திட்டத்துக்கும் உள்ள வேறுபாடு குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப் மற்றும் இபிஎஸ் வேறுபாடு என்ன?

இபிஎஃப் திட்டத்தில் பணியாளரும், அவர் பணியாற்றும் நிறுவனமும் பணம் செலுத்து வார்கள். ஆனால், நிறுவன பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஸ் எனப்படும் பென்சன் திட்டத்திற்கு செல்கிறது. இபிஎஃப் தொகை வட்டியுடன் சேர்ந்து வரும் தொகையாகும். அதை நீங்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். இபிஎஸ் தொகை நம் ஓய்வு காலத்தில் பென்சன் கிடைக்க வழி வகுக்கும். அதற்கு வட்டி கிடைக்காது. இபிஎஸ் திட்டத்தில் பென்சன் பெற விரும்பினால் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். மேலும் 58 ஆண்டுகள் நிரம்பியவர் என்றால் முழுமையான பென்சன் பெற முடியும்.

10 ஆண்டுகளுக்கு குறைவான சேவை இருந்தால் என்ன செய்வது?

நீங்கள் 10 ஆண்டுகளுக்குள் பிஎஃப் தொகையை முழுமையாக எடுத்துவிட்டீர்கள் என்றால், பென்சன் தொகை தானாகவே சேராது. இந்த நிலையில் ஃபார்ம் 10சி (Form 10C) என்பதைக் கொண்டு இபிஎஸ் தொகையை திரும்பப் பெறலாம். இந்த படிவத்தை இபிஎஃப்ஓ இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இதற்கு ஆதார் மற்றும் KYC அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பென்சன் தொகை பாதிக்குமா?

இதில் மிகவும் முக்கியமானது நீங்கள் பிஎஃப் தொகையை எடுத்துவிட்டாலும், இபிஎஸ் திட்டத்தில் நீங்கள் பஞ்சன் பெறும் உரிமையை இழக்கமாட்டீர்கள். 58 வயதுக்கு பிறகு, Form 10D மூலம் பென்சன் பெற விண்ணப்பிக்கலாம். இபிஎஸ் பதிவுகள் உங்கள் யுஏஎன்(UAN)க்கு இணைக்கப்பட்டிருக்கும். இது உங்கள் சேவையை தொடர்வதற்கும், பென்சன் பெறுவதற்கும் மாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

பென்சன் நிலையை எப்படிப் பார்ப்பது?

  1. EPFO இணைய பக்கத்திற்கு சென்று உங்களின் யுஏஎன் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.

  2. “View” பகுதியில் “Service History” என்பதை கிளிக் செய்யவும்.

  3. உங்கள் நிறுவன வரலாறு மற்றும் இபிஎஸ் பங்களிப்பு பற்றிய தகவல்களை காணலாம்.

உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்த சின்மயின் 'முத்தமழை' பாடல்!
உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்த சின்மயின் 'முத்தமழை' பாடல்!...
இங்கிலாந்தில் 3 தொடர் வெற்றியே! யார் தலைமையில் கடைசி வெற்றி?
இங்கிலாந்தில் 3 தொடர் வெற்றியே! யார் தலைமையில் கடைசி வெற்றி?...
ஜிம்மிற்கு சென்ற சமந்தாவைக் கோபப்படுத்திய ரசிகர்கள் வீடியோ வைரல்!
ஜிம்மிற்கு சென்ற சமந்தாவைக் கோபப்படுத்திய ரசிகர்கள் வீடியோ வைரல்!...
அதிகமாக முடி உதிர்கிறதா? இந்த காரணங்களாக இருக்கலாம்
அதிகமாக முடி உதிர்கிறதா? இந்த காரணங்களாக இருக்கலாம்...
அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் டிரம்ப் மொபைல் - என்ன ஸ்பெஷல்?
அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் டிரம்ப் மொபைல் - என்ன ஸ்பெஷல்?...
நடிகை பிரியாமணியின் நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ்...
நடிகை பிரியாமணியின் நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ்......
கூட்டணி ஆட்சி குறித்து பாஜக பேசுவது ஏன்..? திருமாவளவன் விளக்கம்!
கூட்டணி ஆட்சி குறித்து பாஜக பேசுவது ஏன்..? திருமாவளவன் விளக்கம்!...
இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி - எப்படி செயல்படும்?
இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி - எப்படி செயல்படும்?...
காப்பி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லாலின் துடரும் படம்...
காப்பி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லாலின் துடரும் படம்......
சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை - நீயா நானா கோபிநாத் பேச்சு!
சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை - நீயா நானா கோபிநாத் பேச்சு!...
சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...