Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

EPFO : பிஎஃப் அட்வான்ஸ் தொகை குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? எப்படி தவிர்ப்பது?

Understanding Your PF Claim : பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. ஓய்வு காலத்தில் மட்டும் இல்லாமல், அவசர தேவைகளுக்கும் பணம எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சில நேரங்களில் நாம் கோரிய தொகையை விட குறைவாக கிடைக்கலாம். அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

EPFO : பிஎஃப் அட்வான்ஸ் தொகை குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? எப்படி தவிர்ப்பது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 10 Jun 2025 15:16 PM

கடந்த முப்பதாண்டுக்கு மேலான காலமாக இந்தியாவின் ஊழியர்களுக்கான ஓர் முக்கிய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக இருந்து வருகிறது பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund Organisation). இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎப் கணக்கில் செலுத்துகிறார்கள். இத்தகைய திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை ஓய்வு காலத்தில் ஊழியர்களுக்கு ஒரு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இந்நிலையில், பல நேரங்களில் இபிஎஃப்ஓவில் (EPFO) இருந்து  அவசர தேவைகளுக்கு முன்கூட்டியே பணத்தை எடுக்கும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்குகிறது.  ஆனால் சில நேரங்களில் ஊழியர்கள் தாங்கள் கோரிய தொகையைவிட குறைவாகவே பணம் வருவதாக பலரும் புகார் செய்கிறார்கள். ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது குறித்து என்டிடிவி பிராஃபிட்டில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் பார்க்கலாம்.

 முக்கியமான காரணங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே முன்கூட்டிய தொகையை பெற இபிஎஃப்ஓ பணியாளர்களை அனுமதிக்கிறது. பல காரணங்களால் நாம் கேட்கும் தொகையை விட குறைவாகவே கிளைம் செய்ய முடியும்.

வீடு கடனுக்கான கிளைம் குறைவாக கிடைக்க காரணம்

வீடுக கட்ட, அல்லது வீட்டுக்கடனுக்கு பணம் செலுத்த பிஎஃப் தொகையை கிளைம் செய்ய முடியும். இதற்காக அதிகபட்சமாக பிஎஃப் தொகையில் இருந்து 90 சதவிகிதம் வரை கிளைம் செய்யலாம். ஆனால் இதற்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்து பிஎஃப் செலுத்தியிருக்க வேண்டும். வீடு ஊழியர் மற்றும் அவரது மனைவி பெயரில் இருக்க வேண்டும்.

சொத்து பத்திரம், கடன் விவரம் இல்லாமல் ஆகியவை இல்லாமல் கிளைம் கோரும்போது குறைவாக இருக்கலாம். சேவை காலம் குறைவாக இருந்தால் கிளைம் செய்தால் குறைவாக கிடைக்கும்.  இந்த நேரங்களில் 36 மாத பிஎஃப் தொகை, அல்லது இருப்பு தொகையில் 90 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும்.

திருமணத்துக்கான கிளைம் குறைவாக கிடைக்க காரணம்

தனது அல்லது தனது மகன் மகள் திருமணத்தின் போது அதிகபட்சம் 50 சதவிகிதம் வட்டியுடன் கிடைக்கும். இதற்கு ஊழியர் 7 ஆண்டுகள் சேவையில் இருக்க வேண்டும். 3 முறை வரை கிளைம் செய்யலாம்.

சேவை காலம் குறைவாக இருக்கும் போதோ அல்லது ஏற்கனவே சில முறை கிளைம் செயதிருந்தால் கிளைம் தொகை குறைவாக இருக்கும். அல்லது போதுமான தொகை இல்லாத போது கிளைம் குறைவாக கிடைக்கும். திருமண அழைப்பிதழை சமர்பிக்கவில்லை என்றாலும் குறைவான தொகை கிடைக்க காரணமாக இருக்கும்.

ஓய்வுகால தொகை குறைவாக கிடைக்க காரணம்

ஓய்வு பெறும் வயதில் அல்லது அதற்கு ஒரு வருடத்திற்கு முன் கிளைம் செய்து கொள்ளலாம். இதற்கு குறைந்தது 54 வயது இருக்க வேண்டும். ஓய்வூதிய வயது உங்களுக்கு வரவில்லை, சேவைக்காலம் குறைவு, அல்லது ஒய்வூதிய விவரங்கள் தவறாக குறிப்பிட்டிருந்தாலோ உங்கள் கிளைம் தொகை குறைவாக கிடைக்கலாம்.

எப்படி தவிர்ப்பது?

  • ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்யவும்.
  • உங்கள் சேவை காலம் அல்லது இருப்பு தொகை குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் உங்களுக்கு குறைவான தொகை கிடைக்கலாம். எனவே அதற்கு ஏற்ப கிளைம் செய்வது நல்லது.
  • இபிஎஃப்ஓ தளத்தில் நீங்கள் கோரிய தொகை, மற்றும் உங்களுக்கு கிடைத்த தொகை ஆகியவற்றை பார்வையிடுங்கள். உங்களுக்கான காரணங்கள் சரியாக இருந்தும் குறைவாக இருந்தால் இபிஎஃப்ஓவில் புகார் தெரிவியுங்கள்.

 

தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் 100, 200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் 100, 200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி...