Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : ஜூன் 30-க்குள் UAN ஆக்டிவேட் செய்ய வேண்டும்.. காலக்கெடுவை நீட்டித்த இபிஎஃப்ஓ!

EPFO Extends UAN Activation Deadline | உறுப்பினர்கள் தங்களது யுனிவர்சல் அக்கவுன்ட் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்வதற்காக கால அவகாசத்தை ஜூன் 30, 2025 வரை நீட்டித்துள்ளது.

EPFO : ஜூன் 30-க்குள் UAN ஆக்டிவேட் செய்ய வேண்டும்.. காலக்கெடுவை நீட்டித்த இபிஎஃப்ஓ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 16:07 PM

யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN – Universal Account Number) ஆக்டிவேட் செய்வதற்காக கால அவகாசத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) ஜூன் 30, 2025 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான கடைசி தேதியாக மே 30, 2025 இருந்த நிலையில், இபிஎஃப்ஓ இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், நிரந்தர கணக்கு எண்ணை ஆக்டிவேட் செய்வதன் அவசியம் என்ன, அது குறித்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கூறியுள்லது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் அமைப்புதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இதன் மூலம், ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில், ஊழியர்களின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பிஎஃப் தொகை சேமிக்கப்படுகிறது. இதேபோல் ஊழியர்கள் தங்களது பணி காலம் முடிந்த பிறகு ஓய்வூதியம் பெறவும் இந்த அமைப்பு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. என்னதான் பல்வேறு சிறப்பு அம்சங்களை ஊழியர் வருங்கால வைப்பு நித்தி அமைச்சகம் வழங்கினாலும் அவற்றின் மூலம் பயனடைய சில காரணிகள் முக்கியமாக கருதப்படுகிறது.

அத்தகைய முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர். இந்த எண் தான் ஊழியர்களின் கணக்கு எண்ணாக உள்ளது. இதில் தான் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணம் வரவு வைக்கப்படும். இவ்வாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் எந்த அம்சங்களை பயன்படுத்த வேண்டும் என்றாலும் அவற்றுக்கு யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. யுஏஎன் எண்ணை ஆக்டிவே செய்யவில்லை என்றால் மேற்குறிப்பிட்ட எந்த அம்சங்களையும் உறுப்பினர் பெற முடியாது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

பெரும்பாலான உறுப்பினர்கள் உழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு வைத்திருந்தாலும், யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்யாமல் வைத்துள்ளனர். இந்த நிலையில், யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய மே 30, 2025 கடைசி தேதி என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அந்த அவகாசத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதாவது, ஜூன் 30, 2025-க்குள் யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கூறியுள்ளது குறியுள்ளது. மேலும், வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதியாகவு ஜூன் 30, 2025 நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.