UPI : இனி யுபிஐ பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்?.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன முக்கிய தகவல்!
UPI Charges in India | இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் யுபிஐ சேவைகளை பயன்படுத்த இந்தியாவில் கட்டணம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவைகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களில் யுபிஐ சேவைகளை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கட்டண முறை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், யுபிஐ கட்டணம் குறித்து வெளியான தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் யுபிஐ சேவை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யுபிஐ சேவை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். விரைவாக பணம் செலுத்துவது, அலைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான மக்களுக்கு யுபிஐ மிக சிறந்த தேர்வாக உள்ளது. ஏற்கனவே யுபிஐ சேவைகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில், நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதையும் படிங்க : Personal Loan : 10 நிமிடங்களுக்கும் குறைவாக தனிநபர் கடன் பெறலாம்.. இந்த அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!




யுபிஐ சேவைகளுக்கு விரைவில் கட்டணம் – ஆர்பிஐ கவர்னர் கூறியது என்ன?
இது குறித்து கூறியுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank of India) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, டிஜிட்டல் பண பறிமாற்ற முறையின் எளிமை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த அம்சத்தை செயல்படுத்தவும், பராமரிக்கவும் சிறிது பணம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார். பணமும், பணம் செலுத்துவதும் வாழ்நாள் முழுவதும் தேவையான ஒன்று. தற்போது வரை எந்த கட்டணமும் இல்லை. யுபிஐ பரிவர்த்தனை முறையில் பங்குதாரர்களாக உள்ள வங்கிகள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு கட்டணம் செலுத்தி வருகிறது. இங்த நிலையில், யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் செலுத்த கூடிய நிலை வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : UPI : யுபிஐ பண பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா.. சர்வதேச நிதியம் அறிக்கை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் யுபிஐ பயணர்களின் எண்ணிக்கை
இந்தியாவை பொருத்தவரை கடைகோடி கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாத பகுதிகளிலும் கூட யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் யுபிஐ வளர்ச்சி அடையும் நிலையில், அதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், யுபிஐ சேவை கட்டணம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.