Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு..

Airport To Kilambakkam Metro: சென்னை அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவைக்காக தமிழ்நாடு அரசு ரூ. 1964 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Sep 2025 20:23 PM

சென்னை, செப்டம்பர் 3, 2025: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க, முதல் கட்டமாக ரூ.1964 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மொத்தம் 15.5 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைய இருக்கிறது. சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் இருந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லாத காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தரப்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயங்கும் மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, தாம்பரம் வரை செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்போது கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. நடந்தது என்ன?

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்:

அதேபோல், ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பகுதியில் புதிய ரயில் நிலையம் 2025 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமமின்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று வருகின்றனர். அதேபோல், மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்திலிருந்து விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான திட்டத்திற்கு ரூ.1964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க: குறையும் மழை.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. எச்சரிக்கும் வானிலை ரிப்போர்ட்..

15 கி.மீ தூரத்தில் 13 ரயில் நிலையங்கள் கொண்ட மெட்ரோ ரயில் திட்டம்:

முதல் கட்டப் பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 15.5 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 13 ரயில் நிலையங்கள் இடம்பெறும். அவை:

  • விமான நிலையம்
  • பல்லாவரம்
  • கோதண்டம் நகர்
  • குரோம்பேட்டை
  • மகாலட்சுமி நகர்
  • திரு.வி.க. நகர்
  • தாம்பரம்
  • இரும்புலியூர்
  • பீர்க்கங்கரணை
  • பெருங்களத்தூர்
  • வண்டலூர்
  • அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

முதலில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு பல சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக, நெடுஞ்சாலை துறை தரப்பில் மேம்பாலங்கள் இருப்பதால் அப்பகுதிகளில் மெட்ரோ ரயில் அமைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. பின்னர், மெட்ரோ ரயில் அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலகட்ட ஆலோசனைகள் நடத்தி, இந்த புதிய திட்டம் அமைக்கப்பட உள்ளது.