மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!
Chennai Crime News : சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து 41 வயதான பெண் உயிரிழந்துள்ளார். தோண்டப்பட்ட பள்ளத்தின் மீது கட்டை வைத்திருந்த நிலையில், அதன் மீது பெண் நடந்து சென்றபோது பள்ளத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 03 : சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளுக்கான தோண்டப்பட்ட பள்ளத்தின் மீது போடப்பட்ட மரக்கட்டையில் நடந்தபோது, விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பள்ளமும் தோண்டப்பட்டுள்ளது. இந்த தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, பலரும் உயிரிழந்து வருகின்றனர். இப்படியொரு சம்பவம் தான், சென்னை சூளைமேட்டில் நடந்துள்ளது. கோடம்பாக்கம், வாசுபுரத்தைச் சேர்ந்தவர் தீபா (41).
இவர் அதிகாலை 12.10 மணியளவில், வீரபத்ரன் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில், மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த பள்ளத்தில் மீது இரும்புக் கட்டை ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. இதனை கவனிக்காத தீபா, அந்த இரும்புக் கட்டையில் கால் வைத்துள்ளார். இதில், கட்டை சரிந்து, அவர் குழிக்குள் விழுந்துள்ளார். இதில், தீபாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும அவர் அந்த பள்ளத்திலேயே இருந்துள்ளார். காலையில் பள்ளிக்கு சென்ற சிறுவன், குழிக்குள் பெண் ஒருவர் கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார்.
Also Read : சிறுவன் அடித்து கொலை.. பிணத்துடன் 2 நாள் இருந்த குழந்தை… தந்தை செய்த கொடூர செயல்!




மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனைக்கு பிறகே, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியப்படும் என போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குழியில் தற்செயலாக விழுந்ததால் தீபா இறந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தீபாவின் பிரேத அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, பள்ளத்தில் விழுந்த தீபாவுக்கு நெற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் தீபாவின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு குட் நியூஸ்.. காலாண்டு விடுமுறை இத்தனை நாளா? தேர்வு அட்டவணை வெளியீடு
மேலும், நள்ளிரவு 12.30 பள்ளத்தில் விழுந்த தீபா 1 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இரவில் அப்பகுதியில் வெளிச்சம் குறைவாக இருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். வார்டு கவுன்சிலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.