1 முதல் 5ம் வகுப்புகளுக்கு குட் நியூஸ்.. காலாண்டு விடுமுறை இத்தனை நாளா? தேர்வு அட்டவணை வெளியீடு
Tamil Nadu School Quaterly Exam Holiday Schedule : தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. மேலும், காலாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 26ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 03 : தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு (Tamil Nadu Quaterly Exam) அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அண்மையில் தான், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. 2025-26ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் 2025 ஜூன் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மாணவர்கள் காலாண்டு தேர்வுக்காக தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஆசியர்களும் அதற்கான பாடத்திட்டத்தை முடித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு குட் நியூஸ்
அதன்படி, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருககிறது. எனவே, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது.




Also Read : மாணவர்கள் ஹேப்பி.. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு
மேலும், 2025 அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிட்டதட்ட 11 நாட்கள் காலாண்டு விடுமுறை வருகிறது. சமீபத்தில் தான், 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது.
காலாண்டு விடுமுறை
அதன்படி, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 10ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி, 2025 செப்டம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் 12,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்திலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய வேலையிலும் தேர்வகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Also Read : +1 பொதுத்தேர்வு ரத்து.. 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி, 2025 செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விடுமுறையிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.