Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 11 நாட்கள் காலாண்டு விடுமுறை.. தேர்வு அட்டவணையும் வெளியீடு!

Tamil Nadu School Quaterly Exam Holiday Schedule : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, காலாண்டு தேர்வுகள் முடிவடைந்ததும், மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டபம்ர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 11  நாட்கள் காலாண்டு விடுமுறை.. தேர்வு  அட்டவணையும் வெளியீடு!
காலாண்டு விடுமுறைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 27 Aug 2025 06:30 AM

சென்னை, ஆகஸ்ட் 27 : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் காலாண்டு விடுமுறை (Quaterly Exam Holiday) குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, காலாண்டு விடுமுறை 11 நாட்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. 2025-26ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் 2025 ஜூன் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மாணவர்கள் காலாண்டு தேர்வுக்காக தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஆசியர்களும் அதற்கான பாடத்திட்டத்தை முடித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வு 2025 செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதே நாட்களில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தான் முன்கூட்டியே காலாண்டு தேர்வு தொடங்குகிறது.

Also Read : மாணவர்கள் ஹேப்பி.. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு

11 நாட்கள் காலாண்டு விடுமுறை

அதன்படி, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 செப்டம்பர் 10ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி, 2025 செப்டம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதில் 12,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்திலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய வேலையிலும் தேர்வகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வுகள் முடிவடைந்ததும் மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, 2025 செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் செப்டம்பர் மாதத்தில் 4 நாட்கள் காலாண்ட விடுமுறை வருகிறது.

Also Read : நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி? கட் ஆஃப் விவரம் இதோ

இதற்கிடையில் 2 வார இறுதி நாட்களும் வருகிறது. 2025 அக்டோபர் மாதத்தில் 5 நாட்கள் என மொத்தம் 11 நாட்கள் காலாண்டு விடுமுறை கிடைக்கிறது இந்த விடுமுறையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என அனைவத்து வருகிறது. 11 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இதற்கிடையில் சமீபத்தில் தான், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், இனி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.  மேலும், 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.