நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி? கட் ஆஃப் விவரம் இதோ
NEET PG Exam Result 2025 : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி நடந்த நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

டெல்லி, ஆகஸ்ட் 19 : நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை (NEET PG Exam Result 2025) தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்கலாம். ஆண்டுதோறும் நீட் இளநிலை, முதுநிலை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எம்பிபிஎஸ், பிஎஸ், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் இளநிலை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு முதுநிலை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர்.
நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியானது
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுநிலை தேர்வு 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்றது. 301 நகரங்களில் 1,035 மையங்களில் ஒரே ஷிப்டில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டது.
Also Read : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சேர்க்கைக்கான நீட் 2025 கலந்தாய்வு இன்று தொடக்கம்…




இந்த நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. மாணவர்கள் https://natboard.edu.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். உங்களது எண், மெயின் ஐடி, கடவுச்சொல் உள்ளிட்டவற்றை உள்ளீட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். இதன்பின்பு, தேர்வு முடிவின் நகலையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
Also Read : தமிழக மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைப்பு.. காரணம் என்ன?
கட் ஆஃப் மதிப்பெண்கள் விவரம்
மேலும், நீட் முதுநிலை தேர்வுக்கான கட் ஆஃப் விவரங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுப் பிரிவு/பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவனருக்கான கட் ஆஃப் 276 மதிப்பெண்கள் (50 சதவீதம்), எஸ்சி/எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கான கட் ஆஃப் 235 மதிப்பெண்கள் (40 சதவீதம்), பொது மாற்றுத்திறனாளிகள் கட் ஆப் 255 மதிப்பெண்கள் (45 சதவீதம்) ஆகியவை கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே கல்லூரிகளில் சேர முடியும். தேர்வு முடிவுகள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்களுக்கு 011-45593000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.