தண்டவாள பராமரிப்பு பணிகள்.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் எந்த சிரமமும் இன்றி மக்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்வதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில் மட்டும் ரயில் சேவை இயக்கத்தில் (ரயில் இயங்கும் நேரம்) மாற்றம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 6, 2025: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில்கள் செப்டம்பர் 9, 2025 முதல் அக்டோபர் 19, 2025 வரை காலை 5 மணி முதல் மாலை 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் என்பது பச்சை வழித்தடம் மற்றும் நீல வழிதடமாகிய இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும், மீனம்பாக்கத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலும் இயக்கப்படுகிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் வசதிக்காக புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்ட வருகிறது.
அதேபோல் தற்போது எந்த சிரமமும் இன்றி மக்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்வதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில் மட்டும் ரயில் சேவை இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கத்தில் மாற்றம்:
காலை 6:30 மணிக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல எந்த மாற்றமுமின்றி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ” சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பச்சை வழித்தடத்திலும் நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்த பணி மிகவும் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:
- பராமரிப்பு பணி காலம்: செப்டம்பர் 9, 2025 முதல் அக்டோபர் 19, 2025 வரை.
- பராமரிப்பு பணி நேரம்: தினமும் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை.
- இந்த நேரத்தில், மெட்ரோ ரயில்கள் வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
- காலை 6:30 மணிக்குப் பிறகு சேவைகள் வழக்கம் போல எவ்வித மாற்றமும் இல்லாமல் இயங்கும்.
- இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் பராமரிப்பு நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும்.
மேலும் படிக்க: கொங்குவின் முக்கிய முகம்… ரூட்டை மாற்றுவாரா செங்கோட்டையன்? 2026 தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்
பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரயில் பாதை பராமரிப்பு பணிகள், ரயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்காக மிகவும் அவசியம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.