Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் ஐயர்ன்மேன் 5i50 டிரையத்லான் போட்டி.. எங்கே ? எப்போது? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..

Ironman 5i50 Triathlon: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ள ஐயர்ன்மேன் 5i50 டிரையத்லான் போட்டிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது 1.5 கி.மீ நீச்சல் – 40 கி.மீ சைக்கிளிங் – 10 கி.மீ ஓட்டம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.

சென்னையில் ஐயர்ன்மேன் 5i50 டிரையத்லான் போட்டி.. எங்கே ? எப்போது? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..
சென்னையில் ஐயர்ன்மேன் 5i50 டிரையத்லான் போட்டி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Sep 2025 21:27 PM IST

சென்னை, செப்டம்பர் 5, 2025: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் ஐயர்ன்மேன் 5i50 டிரையத்லான் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ள ஐயர்ன்மேன் 5i50 டிரையத்லான் (IRONMAN 5i50 TRIATHLON) போட்டிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை ஹயாட் ரெஜென்சியில் (Hyatt Regency), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் YOSKA இணைந்து, இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நடத்தும் இந்த ஐயர்ன்மேன் 5i50 டிரையத்லான் போட்டியை அறிமுகப்படுத்தி, பந்தய இலச்சினையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னையில் டிரையத்லான் போட்டி:


இந்த 5150 டிரையத்லான் போட்டி 2026 ஜனவரி 11ஆம் தேதி, கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.எம் பீச் ரிசார்ட்டில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். அப்போது மேடையில் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சரின் துணையுடன் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் முதன்முறையாக ஐயர்ன்மேன் டிரையத்லான் போட்டியை சென்னையில் நடத்துவது பெருமையானது. இந்தப் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: பௌர்ணமி கிரிவலம்.. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்..

மேலும் அவர், “சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்த நிகழ்வு ஆயிரக்கணக்கான வீரர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தை உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்னணியிடமாக நிலைநிறுத்தும். தொடர்ந்து தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார்,” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்.. மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை கருத்து..

டிரையத்லான் போட்டி என்றால் என்ன?

இந்த டிரையத்லான் போட்டி 1.5 கி.மீ நீச்சல் – 40 கி.மீ சைக்கிளிங் – 10 கி.மீ ஓட்டம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, ஐயர்ன்மேன் இந்திய தலைமை பிரதிநிதிகள் தீபக் ராஜா மற்றும் ஆராதி சுவாமிநாதன், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.