உல்லாசமாக இருக்க அழைத்த பெண்.. நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்த ஷாக்.. ரூ.80,000 கொள்ளையடித்த கும்பல்!
Young Man Lost 80,000 | பெங்களூரில் பெண் ஒருவர் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறிய நிலையில், அதனை நம்பி சென்ற இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் திருடியுள்ளது.

பெங்களூரு, செப்டம்பர் 06 : பெங்களூரில் (Bengaluru) உல்லாசமாக இருக்கலாம் என இளைஞரை அழைத்த பெண், தனது கூட்டாளிகளுடன் அவரை தாக்கி பணம் பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரிடம் இருந்து பணம், பொருட்களை திருடிய அந்த கும்பல் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு பெண் உட்பட 6 பேரை கைது செது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆசை வார்த்தை கூறி இளைஞரை அழைத்த பெண்
கேரளாவை சேர்ந்தவர் சந்தீப் குமார் என்ற 27 வயது இளைஞர். இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு உடுப்பி மாவட்டம், குந்தாப்புராவுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு அப்துல் சவத் என்ற இளைஞருடன்ன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலம் அஸ்மா என்று 42 வயது பெண்ணுடனும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 02, 2025 அன்று சந்தீப் குமாரை செல்போனில் தொடர்புக்கொண்ட அஸ்மா, தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார். அதனை நம்பி அந்த இளைஞரும் அந்த பெண் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : மனைவியுடன் சண்டை.. 3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை.. தானும் விபரீத முடிவு!




கூட்டாளிகளுடன் இணைந்து இளைஞரிடம் கொள்ளையடித்த பெண்
இளைஞரை தனிமையாக இருப்பதற்காக ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற அஸ்மா, அங்கு தனது கூட்டாளிகளை வரவழைத்துள்ளார். இந்த நிலையில், அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சந்தீப் குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.6,200-ஐ பறித்துள்ளனர். பின்னர் அவரின் செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் மூன்று தவணைகளாக ரூ.35 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர். அதுமட்டுமன்றி, அந்த இளைஞரின் ஏடிஎம் கார்டின் பின் நம்பரை வாங்கிய அந்த கும்பல் அதில் இருந்து சுமார் ரூ.40,000 பணத்தை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : Gurgaon Tragedy: திருமணத்திற்கு மீறிய உறவு, கொலை, துரோகம்.. குர்கான் டெய்லர் கொலை வழக்கு முழு விவரம்!
இளைஞரிடம் இருந்த மொத்த பணத்தையும் பறித்துக்கொண்ட அந்த கும்பல், அவரை இரவு 11 மணிக்கு விடுவித்துள்ளது. அப்போது இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் அந்த கும்பல் அவரை மிரட்டியுள்ளது. ஆனால், அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாத அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல் சவத், அஸ்மா உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.