காதலியின் போன் பிஸி.. விரக்தியில் மின்சார வயர்களை துண்டித்த இளைஞன்..
Bihar: பீகாரில் காதலியின் செல்போனியன் தொடர்ந்து பிஸியாக இருந்ததன் காரணமாக அப்பகுதிக்கு செல்லக்கூடிய மின்சார வயர்களை காதலன் துண்டித்துள்ளார். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், செப்டம்பர் 2, 2025: பிகார் மாநிலத்தில் காதலியின் செல்போனியன் தொடர்ந்து பிஸியாக இருந்ததன் காரணமாக அப்பகுதிக்கு செல்லக்கூடிய மின்சார வயர்களை காதலன் துண்டித்த சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலின் செல்போனுக்கு நீண்ட நேரமாக அழைத்திருக்கிறார் ஆனால் வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த அந்த இளைஞன் காதலின் கிராமத்திற்கு நேரடியாக சென்று அங்கு இருக்கக்கூடிய மின்கம்பத்தில் ஏறி அந்த பகுதிக்கு செல்லக்கூடிய மின்சார வயர்களை தூண்டித்துள்ளார். இதனால் மொத்த கிராமமும் இருளில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்றதாகவும். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன் எடுக்காத காதலி – விரக்தியில் மின்சார வயர் துண்டித்த காதலன்:
Youth cuts off electricity to entire village over Girlfriend’s busy phone
pic.twitter.com/YqabG1WeIL— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 2, 2025
காதலி தனது தொலைபேசியை எடுக்காததன் காரணமாக இந்த செயலில் இளைஞர் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சியில் அந்த இளைஞர் மின் கம்பத்தில் ஏறி பெரிய கட்டிங் பிளேடு உதவியுடன் அந்த கம்பங்களில் இருக்கக்கூடிய மின்சார வயர்களை துண்டிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஆபத்தை உணராமல் அந்த இளைஞன் செய்த செயல் இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த செயலால் அந்த கிராமம் முழுவதுமே மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது தொடர்பாக அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ல் அரங்கேறிய சம்பவம்:
இதற்கு முன்னதாக பிகார் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரின் புர்னியா மாவட்டத்தின் கணேஷ்பூர் கிராமத்தில் இளைஞர் தனது காதலியை இருட்டில் சந்திப்பதற்காக ஒவ்வொரு மாலையும் அப்பகுதியில் இருக்கக்கூடிய மின்கம்பங்களில் ஏறி மின்சாரத்தை துண்டித்துள்ளார். தினசரி இரண்டு முதல் மூன்று மணி நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர்.. முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி..
ஆனால் அக்கம் பக்கத்தில் இருக்கக்கூடிய கிராமங்களில் அல்லது பகுதிகளில் சீரான மின்சார விநியோகம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இதன் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரையும் அந்த பெண்ணையும் கிராம மக்கள் ஒன்றிணைந்து திருமணம் செய்து வைத்தனர்