வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர்.. முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி..
PM Modi Manipur Visit: பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 2025, செப்டம்பர் 1 ஆம் தேதி மணிப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இது தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

டெல்லி, செப்டம்பர் 2, 2025: இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை 2025, செப்டம்பர் 13 அல்லது 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நாட்களாக இந்த யூகங்கள் பரவி வந்த நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி 2025 செப்டம்பர் 13-ஆம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு செல்ல வாய்ப்புள்ளதாக, ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, பிரதமர் மணிப்பூருக்கு செல்வதற்கு முன்பு, மிசோரத்தில் உள்ள 51.38 கிலோமீட்டர் புதிய பைராபி – சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பார். மிசோரம், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு தயாராகி வருகிறது. மிசோரம் தலைமைச் செயலாளர் கில்லி ராம் மீனா, இது தொடர்பாக பல துறைகள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கி, தயார்நிலை மதிப்பாய்வு செய்தார்.
பிரதமர் மோடியின் வருகைக்கு தயாராகும் மிசோரம்:
இது தொடர்பான அறிக்கையில், பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து மேலாண்மை, வரவேற்பு மற்றும் அலங்காரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வாலின் லம்மாலில் நடைபெறும் தொடக்க விழாவில் அரசு ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பதும் ஏற்பாடுகளில் அடங்கும்.
மேலும் படிக்க: இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகள்.. 100-ல் 11 பேருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்.. ஷாக் ரிப்போர்ட்..
ரயில்வேத் திட்டம் மற்றும் கிழக்கு செயல்பாட்டுக் கொள்கை: அசாமின் சில்சார் நகரத்துடன் இணைக்கும் பைராபி – சாய்ராங் ரயில் பாதை, மையத்தின் கிழக்கு செயல்பாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம், வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் இணைப்பை மேம்படுத்தி, பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடி:
ஆனால், மணிப்பூர் வருகை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தனது ஐஸ்வால் நிகழ்வுக்குப் பிறகு மணிப்பூருக்கு விமானத்தில் செல்வார் என மிசோரம் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், இம்பாலில் உள்ள அதிகாரிகள் அவரது வருகையை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை. மே 2023-ஆம் ஆண்டில் இன வன்முறை வெடித்த பிறகு, மணிப்பூருக்கு பிரதமர் மோடி முதல் முறையாக செல்ல இருக்கிறார்.
மேலும் படிக்க: 7.8% வளர்ச்சி… சவால்களை மீறி இந்தியா முன்னேற்றம்… டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்
ஆகஸ்ட் 30 அன்று தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷ்யங்கள் கவணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) குழுவுடன் கலந்தாலோசித்து, இரண்டு அடுக்கு காட்சி கட்டர்கள், சிசிடிவி கேமராக்கள், ட்ரோன் கண்காணிப்பு, குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் கதவு சட்ட உலோகக் கண்டுபிடிப்பான்கள் ஆகியவற்றை நிறுவுதல் உள்ளிட்ட கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.