Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gurgaon Tragedy: திருமணத்திற்கு மீறிய உறவு, கொலை, துரோகம்.. குர்கான் டெய்லர் கொலை வழக்கு முழு விவரம்!

Gurgaon Tailor Murder Case: பீகாரில் இருந்து குர்கானுக்கு குடிபெயர்ந்த தையல்காரர் குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-ல் வீட்டிற்கு அருகில் வாடகைக்கு வந்த லாரி க்ளீனர், தையல்காரரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டார். இதன்பிறகு, டெய்லர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது முழுவதுமாக விவரிக்கப்பட்டுள்ளது.

Gurgaon Tragedy: திருமணத்திற்கு மீறிய உறவு, கொலை, துரோகம்.. குர்கான் டெய்லர் கொலை வழக்கு முழு விவரம்!
குர்கான் டெய்லர் கொலை வழக்கு
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2025 16:28 PM IST

குர்கான், செப்டம்பர் 4: காதல் (Love) எப்போதும் உறுதியானது என்று கருதப்படுகிறது. காதலில் விழுந்த ஒரு நபர் எந்த சூழ்நிலையிலும் தனது காதலுக்காக எது வேண்டுமானாலும் செய்ய தோன்றும். இதுபோன்ற ஒரு கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பீகாரில் தொடங்கி குர்கானில் (Gurgaon) சோகமாக முடிந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. பீகாரின் நவாடா மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணமானது (Marriage) பொருளாதார சூழ்நிலையில் மற்றும் சாதியை மனதில் கொண்டு எளிய முறையில் நடந்துள்ளது. திருமணத்தின்போது மணமகனுக்கு 22 வயதும், பெண்ணுக்கு 20 வயதும் ஆகியுள்ளது. மணமகன் தையல்காரர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு அந்த நபர் குர்கானுக்கு சென்று, தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இந்த நேரத்தில் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தனர். மகன் பிறந்த பிறகு, அவரது மனைவியும் அவருடன் குர்கானுக்கு குடிபெயர்ந்தனர். அதன்பிறகு, முழு குடும்பமும் 4வது மாடியில் உள்ள ஒரு தொடர் வீட்டின் ஒன்றில் வாடகைக்கு செல்கின்றனர். முழு குடும்பமும் குர்கானில் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். அவரது தையல் வேலையும் நல்லபடியாக பணப்புழக்கத்தை பெற்று தந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 2023ம் ஆண்டில் 34 வயதுடைய ஒருவர், இவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வாடகைக்கு வந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மனைவியை பிரிந்ததாக தெரிந்தது. இவர் லாரியில் க்ளீனர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் புதிய பக்கத்து வீட்டுக்காரர் வந்ததால், நட்புடனே நாட்கள் நகர்ந்தது. ஆனால், 2024ம் ஆண்டு வாக்கில் பக்கத்து வீட்டுக்காரருக்கும் தையல்காரரின் மனைவிக்கு இடையே திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆரம்பகட்டத்தில் வீட்டிற்குள்ளே தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

லாரி க்ளீனரிடம் பணம் நன்றாக இருந்ததால், அவ்வப்போது இருவரும் வெளியே செல்ல தொடங்கினர். தையல் காரரின் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையிலான இந்த ரகசிய சந்திப்பு நீண்ட காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதற்கிடையில், பக்கத்து வீட்டுக்காரர் அந்த பெண்ணுடன் சில ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை எடுத்து தனது மொபைலில் சேவ் செய்துள்ளார்.

ALSO READ: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.. காதலனை நம்பி சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

தாயின் உறவை தெரிந்துகொண்ட மகள்:

இந்தநிலையில், கடந்த 2025 ஜூலை 25ம் தேதி தையல்காரரின் 13 வயது மகள் ஏதோ வேலைக்காக பக்கத்து வீட்டுக்காரரின் மொபைலை வாங்கியுள்ளது. படிப்புக்காக மொபைலை பயன்படுத்தும்போது, பக்கத்து வீட்டுக்காரரும், அவளுடைய தாயும் தனிமையை இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் தன் தந்தையிடம் தன் தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரின் வீடியோவை பற்றி தெரிவித்துள்ளார். இதனால், பயந்துபோன தையல்காரரின் மனைவி மொபைலில் இருந்து தனது பக்கத்து வீட்டு காதலனுக்கு மெசேஜ் செய்துள்ளார்.

தையல்காரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது நடந்த பல நாட்களுக்கு பிறகு, அந்த பெண்ணும், காதலனுடன் தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு, கடந்த 2025 ஜூலை 28ம் தேதி இரவு 10 மணியளவில், அந்த பெண் தனது கணவர் 2025 ஜூலை 27 முதல் காணவில்லை என்று எழுத்துப்பூர்வ புகார் கொடுத்துள்ளார். கடந்த 2 நாட்களாக உங்கள் கணவர் காணவில்லை என்று சொல்லுகிறீர்கள். ஏன் 2 நாட்களாக புகார் அளிக்கவில்லை என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். இதன்பிறகு, அந்த பெண்ணின் செல்போனையும் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அந்த வீடியோ குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பியபோது, அந்த பெண் பக்கத்து வீட்டுக்காரருடன் எடுத்த வீடியோவை பற்றி போலீசாரிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டுக்காரர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தார். தொடர்ந்து, இதுகுறித்து யாரிடாமாவது தெரிவித்தால் வீடியோவை வைரலாக்கி விடுவேன் என்று தெரிவித்தார். இதனால், தனது பக்கத்து வீட்டுக்காரர் தனது கணவரை கடத்தி சென்றதாக சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

போலீசார் தொடர் விசாரணை:

காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், கடந்த 2025 ஆகஸ்ட் 1ம் தேதி போலீசார் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர். தொடர்ந்து, பக்கத்துவீட்டுக்காரர் போலீசாரிடம் காதலிக்கும்போது எந்த சூழ்நிலையிலும் தன்னுடன் இருப்பேன் என்று பலமுறை கூறிவிட்டு, இப்போது வேண்டாம் என்று கூறிகிறார் என தெரிவித்து, அந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில், பக்கத்து வீட்டுக்காரர் கொலையை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சில மணிநேரங்களுக்கு பிறகு, கொலையை ஒப்புக்கொண்டார்.

அதாவது, கடந்த 2025 ஜூலை 26ம் தேதி சாலையில் நடந்து சென்ற தையல்காரரை தானும் தனது 3 கூட்டாளிகளும் கடத்தி சென்று ஒரு வாகனத்தில் போட்டு, கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார். மேலும், செக்டார் 36ல் உள்ள உயரமான கட்டிடங்களுக்கு பின்னால் உள்ள ஒரு வயலில் உடலை புதைத்ததாகவும் தெரிவித்தார். அதே நாள் இரவு 11 மணியளவில் காவல்துறையினர் பக்கத்து வீட்டுக்காரரை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். உடலை தோண்டி எடுக்கும்போது, துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை மூடிக்கொண்டு, உடலை வெளியே எடுத்துள்ளனர்.

ALSO READ: அடிக்கடி ரீல்ஸ் செய்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ஷாக் சம்பவம்.. டெல்லியில் பகீர்!

பக்கத்து வீட்டுக்காரரின் மொபைலை ஆய்வு மேற்கொண்டபோது, அவர் தனது யூடியூப் பக்கத்தில் ரகுவன்ஷியின் கொடூரமான கொலை, மீரட்டில் நடந்த ஒரு கொலை குறித்த விஷயங்களை பார்த்து, இதேபோன்ற குற்றத்தை செய்துள்ளார். இதை தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காருக்கு உதவிய நபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் இறுதியாக கடந்த 2025 ஆகஸ்ட் 2ம் தேதி, அந்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது, காவல்துறையினரை தவறாக வழிநடத்துவதற்காக அந்த பெண் காணாமல் போனதாக புகார் அளித்ததன் அடிப்படையில் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.