மூன்று மனைவிகளை கைவிட்ட நபர்.. 4வது காதலியை உயிருடன் எரித்த கொடூரம்.. பகீர் சம்பவம்!
Man Burns Live-in Partner | லின் இன் உறவில் இருக்கும் தனது காதலி வேறு ஒரு நபருடன் காரில் சென்றதை கண்ட நபர், காரை விரட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் காரி இருந்து இறங்கி ஓடிய காதலியை விரட்டி சென்று உயிருடன் எரித்துள்ளார்.

பெங்களூரு, செப்டம்பர் 02 : பெங்களூரில் (Bengaluru) மூன்று மனைவிகளை திருமணம் செய்து அவர்களை விட்டு பிரிந்து நான்காவதாக ஒரு பெண்ணுடன் வசித்து வந்த நபர், அந்த பெண்ணை நடுரோட்டில் ஓட ஓட உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலி வேறு ஒரு நபருடன் காரில் சென்ற நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் இத்தகைய கொடூர செயலை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மூன்று மனைவிகளை கைவிட்டு நான்காவதாக ஒரு பெண்ணுடன் இருந்த நபர்
கர்நாடகாவின் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் விட்டல். கார் ஓட்டுநரான இவருக்கு மூன்று பெண்களுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே விட்டல் அந்த பெண்களை பிரிந்துள்ளார். இந்த நிலையில், நான்காவதாக வனஜாக்சி என்ற பெண்ணுடன் அவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வனஜாக்சிக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்ற நிலையில், கணவன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அவர், விட்டலுடன் பழக தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் இரங்கல் செய்தி.. அடுத்த நாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்!




லிவ் இன் முறையில் வாழ்ந்தபோது வெளியே வந்த விட்டலின் உண்மை முகம்
இந்த நிலையில் இருவரும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். சில நாட்கள் இவர்களது லிவ் இன் வாழ்க்கை சிறப்பாக சென்ற நிலையில், ஒரு கட்டத்திற்கு பிறகு பிரச்னை தொடங்கியுள்ளது. அதாவது விட்டல் தினமும் குடித்துவிட்டு வந்திருக்கிறார். பலமுறை மது பழக்கத்தை கைவிடும்படி வனஜாக்சி கூறியும் அவர் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி, தலைக்கேறிய மதுபோதையில் அவர் வனஜாக்சியை கடுமையாக தாக்கி வந்துள்ளார்.
இதையும் படிங்க : மூட நம்பிக்கையின் உச்சம்.. பேரனை நரபலி கொடுத்த தாத்தா.. பகீர் வாக்குமூலம்!
இந்த நிலையில், வனஜாக்சிக்கு மாரியப்பா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாரியப்பா, வனஜாக்சி உள்ளிட்ட மூன்று பேர் காரில் சென்றுக்கொண்டு இருந்துள்ளனர். இது விட்டலுக்கு தெரிய வரவே அந்த காரை பின்தொடர்ந்துள்ளார். அப்போது கார் சாலையில் சிக்னலில் நின்றதும் காரின் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார். இதன் காரணமாக காரில் இருந்தவர்கள் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் மாரியப்பா உள்ளிட்ட இருவர் தப்பித்த நிலையில், விட்டல் வனஜாக்சியை விடாமல் துரத்தியுள்ளார்.
இந்த நிலையில் நடுநோட்டில் அவர் மீது பெட்ரோல் ஊற்றிய விட்டல், சிகரெட் துண்டை வைத்து அவரை உயிருடன் ஏரித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த வனஜாக்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.