Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம் பெண்.. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி.. அதிர்ச்சி சம்பவம்!

Judge Misbehaved with an Young Woman | கேரளாவில் விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம் பெண்ணிடம் நீதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரை கேரள உயர் நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம் பெண்.. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2025 07:52 AM

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 29 : கேரளாவில் (Kerala) விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம் பெண்ணிடம் நீதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தெரிய வரவே கொல்லம் மாவட்டம் நீதிபதியாக இருந்த அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதி தேடி பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் நிலையில், நீதிபதியே இளம் பெண்ணிடம் தவறாக நடதுக்கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

விசாரணைக்கு வந்த இளம் பெண் – பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நலன் நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர், விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது நீதிபதி உதயகுமார் இளம் பெண்ணிடம் பாலில் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண் இதுகுறித்து கொல்லம் மாவட்டம் நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் கேரளா உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை.. 3 வயது மகளுடன் தீக்குளித்த ஆசிரியை.. பரிபோன உயிர்கள்!

நீதிபதியை பணியிடை நீக்கம் செய்த கேரள உயர்நீதிமன்றம்

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி உதயகுமார் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை நீதிமன்றம் அமைத்தது. மேலும், இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது அந்த கொல்லம் மாவட்ட நீதிபதி உதயகுமார், அதே மாவட்டத்தில் வாகன தீர்ப்பாயத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : திருமணத்தை மீறிய உறவு.. வாயில் வெடி வைத்து இளம்பெண் கொலை!

நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் மறு அறிவிப்பு வரும் வரை, எந்த நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய நீதிபதியே இத்தகைய பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.