Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மாமியார்.. ராகி உருண்டையில் விஷம் கலந்து கொலை செய்த மருமகள்!

Woman Kills Mother-in-Law | கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மாமியாரை கொலை செய்த மருமகள், அவர் உடல்நல குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மாமியார்.. ராகி உருண்டையில் விஷம் கலந்து கொலை செய்த மருமகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Aug 2025 07:00 AM

பெங்களூரு, ஆகஸ்ட் 25 : பெங்களூரில் (Bengaluru) கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மாமியாரை மருமகள் ராகி உருண்டையில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தாய் உயிரிழந்த அடுத்த நாளே வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணமல் போன நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரின் மகன் அளித்த புகாரில் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. மேலும், மாமியாரை கொலை செய்தது குறித்த அந்த பெண்ணின் பகீர் வாக்குமூலமும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மருமகள்

பெங்களூரின் சிக்மங்களூரு மாவட்டம், அஜ்ஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். 40 வயதாகும் இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ரமேஷ் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 10, 2025 அன்று ரமேஷின் தாய் தேவிரம்மா உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் இறுதி சடங்கை செய்து முடித்த நிலையில், அடுத்த நாளே வீட்டில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணம் காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : தனிமையில் சந்தித்த காதல் ஜோடி வீட்டில் பிணமாக மீட்பு.. கேரளாவில் பகீர் சம்பவம்!

ராகி உருண்டையில் விஷம் கலந்து மாமியாரை கொன்ற மருமகள்

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் சந்தேகம் அஸ்வினின் பக்கம் திரும்பி உள்ளது. இதனை அடுத்து அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அஸ்வினிக்கும் அதே பகுதியை சேந்த ஆஞ்சநேயா என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆஞ்சநேயா ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போது அஸ்வினி அவரிடம் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொடுத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை – மகனின் கண்முன்னே பெண் எரித்துக்கொலை – கணவன் கைது

அஸ்வினியின் நடத்தையில் மாமியாருக்கு சந்தேகம் வரவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று மாமனார் மற்றும் கணவருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு மாமியாருக்கு ராகி உருண்டையில் விஷயம் கலந்து கொலை செய்துள்ளார். விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் தேவிரம்மாவுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.