Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வரதட்சணை கொடுமை.. 3 வயது மகளுடன் தீக்குளித்த ஆசிரியை.. பரிபோன உயிர்கள்!

School Teacher Dowry Issue | ராஜஸ்தானில் ஐந்து மாதங்களாக மாமியார், மாமனார் வரதட்சணை கொடுமை செய்து வந்த நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மூன்று வயது மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை.. 3 வயது மகளுடன் தீக்குளித்த ஆசிரியை.. பரிபோன உயிர்கள்!
உயிரிழந்த பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Aug 2025 07:32 AM

ஜெய்ப்பூர், ஆகஸ்ட் 26 : ராஜஸ்தானில் (Rajasthan) மாமனார் மற்றும் மாமியார் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்த நிலையில், மனமுடைந்த பள்ளி ஆசிரியை தனது மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ச சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை கடந்த ஐந்து மாதங்களாக அவரது மாமனார் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த நிலையில், சம்பவத்தன்றும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

வரதட்சணை கொடுமை – விபரீத முடிவு எடுத்த பள்ளி ஆசிரியை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்ற பெண்ணுக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் யாஷ்வி என்ற மகள் இருந்தார். சஞ்சு பிஷோனி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது மாமியார் மற்றும் மாமனராகிய தொல்லை கொடுத்து வந்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக அவர்களது தொடர்ந்து அதை செய்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : மாடுகளுக்கு பதிலாக பிள்ளைகளை வைத்து உழவு செய்த விவசாயி.. வெறுமையின் கொடுமை!

மன உளைச்சலில் மகளுடன் தீக்குளித்த ஆசிரியை

இந்த நிலையில் ஆகஸ்ட் 22, 2025 அன்று சஞ்சு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மாமனார் மற்றும் மாமியார் மீண்டும் அவரிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான சஞ்சு, தனது மகளுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மகள் மீதும் தன் மீதும் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் சஞ்சுவின் 3 வயது மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மாமியார்.. ராகி உருண்டையில் விஷம் கலந்து கொலை செய்த மருமகள்!

இந்த நிலையில் சஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். வரதட்சணை காரணமாக ஆசிரியை ஒருவர் தனது மூன்று வயது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.