Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சொத்து தகராறு.. கணவனின் முதல் மனைவி மகளை சரமாரியாக தாக்கிய இரண்டாவது மனைவி!

Bengaluru Property Dispute | பெங்களூரில் நிலத் தகராறு காரணமாக கணவனின் முதல் மனைவி மகளை, இரண்டாவது மனைவி சேற்றில் தள்ளி சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல் மனைவியின் பிள்ளைகள் தராறில் ஈடுபட்ட நிலையில், இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.

சொத்து தகராறு.. கணவனின் முதல் மனைவி மகளை சரமாரியாக தாக்கிய இரண்டாவது மனைவி!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Aug 2025 08:40 AM

பெங்களூரு, ஆகஸ்ட் 26 : பெங்களூரில் (Bengaluru) சொத்து தகராறு காரணமாக கணவனின் முதல் மனைவியின் மகளை இரண்டாவது மனைவி சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு குடும்பங்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று முதல் மனைவியின் மகள் மற்றும் மகன் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி இந்த செயலை செய்துள்ளார். இந்த நிலையில், சொத்து தகராறு காரணாமாக இரண்டாவது மனைவி, முதல் மனையின் மகளை தாக்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல்

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் புட்டசாமி. இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இவர் இரண்டாவதாக பாக்யா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், 5 மாதங்களுக்கு முன்னர் புட்டசாமியும் இறந்துள்ளார். புட்டசாமியின் முதல் மனைவிக்கு ராகேஷ் என்ற மகனும், ரோஜா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், புட்டசாமியின் மறைவுக்கு பிறகு சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாடுகளுக்கு பதிலாக பிள்ளைகளை வைத்து உழவு செய்த விவசாயி.. வெறுமையின் கொடுமை!

6.50 ஏக்கர் நிலத்தை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு

புட்டசாமிக்கு மொத்தம் 6.50 ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அதனை பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்ட ஊர் தலைவர்கள் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு 4.50 ஏக்கர் நிலத்தையும், இரண்டாவது மனைவி பாக்யாவுக்கு மீதமுள்ள 2 ஏக்கர் நிலத்தையும் பிரித்து கொடுத்துள்ளனர். ஆனால் இதில் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத நிலையில், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனை விசாரித்த போலீசார், முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு 3.5 ஏக்கர் நிலத்தையும், பாக்யாவுக்கு 3 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மாமியார்.. ராகி உருண்டையில் விஷம் கலந்து கொலை செய்த மருமகள்!

முதல் மனைவியின் மகளை தாக்கிய பாக்கியா

பாக்கியா தனக்கு கொடுக்கப்பட்ட மூன்று ஏக்கர் நிலத்தை தனது சொந்தக்காரர் ஒருவருக்கு குத்தகை விட்டுள்ளார். அதில் அந்த நபர் அதில் கரும்பு பயிரிட்டுள்ளார். ஏற்கனவே நிலம் பிரித்தது குறித்து ஆத்திரத்தில் இருந்த முதல் மனைவியின் பிள்ளைகள் பாக்கியாவின் நிலத்திற்கு சென்று அங்கு பயிரடப்பட்டு இருந்த கரும்புகளை பிடுங்கி எரிந்துள்ளனர். இதனை பாக்கியா தட்டிக் கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதன்படி, பாக்கியா புட்டசாமியின் முதல் மனைவியின் மகளை சேற்றில் தள்ளி சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.