மனைவியுடன் சண்டை.. 3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை.. தானும் விபரீத முடிவு!
Father Killed Three Children | ஆந்திர பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான நபர் தனது மூன்று குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகரி, செப்டம்பர் 05 : ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) குடும்ப தகராறு காரணமாக புத்தா வெங்கடேஷ் என்பவர் தனது மூன்று குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த நிலையில், தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றத்திற்கு உள்ளான மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குழந்தைகள் மற்றும் புத்தா வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் மீட்டுள்ளனர்.
மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தந்தை
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் புத்தா வெங்கடேஷ். இவருக்கு தீபிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி மோக்சிதா, ரகுவர்ஷினி என இரண்டு மகள்களும், சிவதர்மா என்ற நான்கு வயது ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்த நிலையில், வெங்கடேஷ் மற்றும் தீபிகா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு உள்ளான வெங்கடேஷ் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால், தான் இறந்த பிறகு தங்களது பிள்ளைகள் சிரமப்படுவார்களோ என்று நினைத்துள்ளார்.
இதையும் படிங்க : Gurgaon Tragedy: திருமணத்திற்கு மீறிய உறவு, கொலை, துரோகம்.. குர்கான் டெய்லர் கொலை வழக்கு முழு விவரம்!
பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வெங்கடேஷ்
இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக வெங்கடேஷ் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற அவர், வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ஹாஜிபூர் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து தனது மூன்று குழந்தைகளின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதன் காரணமாக தந்தையின் கண் முன்னே மூன்று குழந்தைகளும் துடிதுடிக்க இறந்துள்ளனர்.
இதையும் படிங்க : அடிக்கடி ரீல்ஸ் செய்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ஷாக் சம்பவம்.. டெல்லியில் பகீர்!
குழந்தைகள் மற்றும் கணவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார் புத்தா வெங்கடேஷ் மற்றும் குழந்தைகளின் உடலை எரிந்த நிலையில் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.