Villupuram: நிலத்தகராறு.. பெண்ணின் சேலையை உருவி கடுமையாக தாக்கிய குடும்பத்தினர்!
Viluppuram Crime News: விழுப்புரம் மாவட்டம், காடாம்புலியூரில் நிலப் பிரச்சனையின் காரணமாக நான்கு பெண்கள் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம், செப்டம்பர் 8: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் பெண்ணை , சக பெண்கள் சேர்ந்து ஆடைகளை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் காடாம்புலியூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் நெல்லித்தோப்பு கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைத்தியநாதன் மற்றும் சிங்காரவேல் என இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூன்று பேரும் விவசாய தொழில் மேற்கொண்டு வந்தனர். அதனால் இவர்களுக்கு பொதுவான நிலம் ஒன்று உள்ளது. இதனை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
மரத்தில் கட்டி வைத்து அடித்த பெண்கள்
இப்படியான நிலையில் வைத்தியநாதன் மனைவி சின்னையாள் இந்த பிரச்சனைக்குரிய 21 சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்கான பணியை மேற்கொண்டதாக கூ,றப்படுகிறது. இதற்கு சிங்காரவேலின் மனைவி செல்வராணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னையாள் அவரது மகள் ஜெயசித்ரா, ஜெயந்தி, அனுராதா ஆகியோர் செல்வராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்.. செருப்பால் அடித்த விசிக நபர்.. பரபரப்பு!




தொடர்ந்து நான்கு பேரும் சேர்ந்து செல்வராணியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த சேலை மற்றும் ஜாக்கெட்டை அவிழ்த்து மானபங்கம் செய்ய முயற்சித்தனர். மேலும் அவிழ்த்த சேலையை கை மட்டும் கழுத்து பகுதியுடன் சேர்த்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். உருட்டு கட்டையாலும் செல்வராணி தாக்கப்பட்டார்.
4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்த நபரையும் அந்த 4 பெண்களும் தாக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதற்கிடையில் செல்வராணிக்கு நடந்த கொடுமையை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து காடாம்புலியூர் போலீசில் செல்வராணி குடும்பத்தினர் புகார் அளித்தனர். செல்வ ராணியின் மகள் கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னையாள் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: Crime: அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!
இதில் அனுராதாவை கைது செய்த நிலையில் மற்றும் மூன்று பேரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சின்னையாள் வீட்டின் அருகே சென்ற ராமரை ஜெயந்தி, அனுராதா மற்றும் அனுராதாவின் மகன் வைத்தீஸ்வரன் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர். இது குறித்து ராமர் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயந்தி, வைத்தீஸ்வரன் மற்றும் அனுராதா ஆகியோர் மீது காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.