இப்படியும் நடக்குமா? மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்!
Maharashtra Boy Alive In Funeral : மகாராஷ்ராவில் 19 வயதான இளைஞர் இறுதிச்சடங்கின்போது உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இறுதிச்சடங்கில் இளைஞரின் கை, கால்கள் அசைந்துள்ளது. இதனை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மகாராஷ்டிரா, செப்டம்பர் 07 : மகாராஷ்டிரா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயது இளைஞர், இறுதிச் சடங்கில் மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் முக்கிய பாகங்களில் ஒன்றாக கருதப்படுவது மூளை. மூளை செயல்பாடு நன்றாக இருந்தால் தான், நாம் அனைத்து வேலைகளையும் செய்ய கொள்ள முடியும். இதயமும், மூளையும் மனிதனின் செயல்பாடுகளில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதனால், தான், மூளைச்சாவு, மாரடைப்பு போன்றவை ஏற்பட்டால் மனிதரின் உயிரை மீட்க எந்த வழியும் இல்லை என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, மூளைச்சாவு அடைந்தால் மனிதனின் உயிரை மீட்கவே முடியாது. ஆனால், தற்போது ஒரு அதிசயம் நடந்துள்ளது. மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவர் இறுதிச்சடங்கில் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான இளைஞர் பால் லச்கே. இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்தில் பலத்த காயமடைந்தார். பின்னர், அட்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க அவர், மருத்துவர்கள் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டதாக கூறினர்.
Also Read : சமோசா வாங்கிக்கொண்டு வராததால் ஆத்திரம்.. கணவனை கொடூரமாக தாக்கிய மனைவி மற்றும் குடும்பத்தினர்!




இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்
இதனை அடுத்து, அவரது உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். இளைஞரின் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை நடத்தினர். இறுதிச்சடங்கின்போது, இளைஞர் பால் லச்கேவின் கை, கால்கள் அசைந்தது. இதனை பார்த்து, இளைஞரின் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், இளைஞரை உடனடியாக மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தனியார் மருத்துவமனை நிர்வாகம், லாச்கே இறந்துவிட்டதாக ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை என்றும், சில மருத்துவச் சொற்கள் குறித்து குடும்பத்தினர் குழப்பமடைந்துள்ளதாகவும் கூறியது.
Also Read : இலங்கை தமிழர்கள் இனி இந்தியாவில் இருக்கலாம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
இதுகுறித்து லச்கேவின் உறவினர் கங்காராம் கூறுகையில், “அவரது இறுதிச் சடங்கிற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவர் அசையவும் இருமவும் தொடங்கினார். திடீர் அசைவுகளைக் கண்ட பாவ் லச்கேவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறினர். மருத்துவர்கள் அவரை வென்டிலேட்டர் உதவியுடன் வைத்துள்ளனர்” என்றார்.