மூளை சாவு அடைந்தவருக்கு பன்றியின் கல்லீரல் – சீன மருத்துவர்கள் சாதனை!
கடந்த சில ஆண்டுகளில், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பன்றிகள் மிகவும் சாத்தியமான ஆதாரமாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மனிதர்களுக்கு பன்றியின் சிறுநீரகங்கள் மற்றும் இதயங்கள் பொறுத்தப்பட்ட நிகழ்வுகள் அமெரிக்காவில் சில முறை நடந்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரலை (Liver) மூளைச்சாவு அடைந்த மனிதனுக்கு சீன (China) மருத்துவர்கள் மார்ச் 26,2025 அன்று முதன்முறையாக வெற்றிகரமாக இடமாற்றம் செய்துள்ளனர். உலக அளவில் உடல் உறுப்புகள் பற்றாக்குறை நெருக்கடியை சமாளிக்க இந்த மாறுபட்ட செயல்முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பன்றிகள் மிகவும் சாத்தியமான ஆதாரமாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மனிதர்களுக்கு பன்றியின் (Pig) சிறுநீரகங்கள் மற்றும் இதயங்கள் பொறுத்தப்பட்ட நிகழ்வுகள் அமெரிக்காவில் சில முறை நடந்துள்ளது. இது உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது.
மூளை சாவு அடைந்தவருக்கு பன்றியின் கல்லீரல்
ஏற்கனவே மரபணு திருத்தப்பட்ட பன்றி சிறுநீரகத்துடன் வாழும் உலகில் மூன்றாவது நபராக சீன நோயாளி மாறிவிட்டார் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு பிறகு அதே குழு தங்கள் பரிசோதனை ஆய்வின் ஒரு பகுதியாக மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு பன்றியின் கல்லீரலை வெற்றிகரமாக பொருத்தியதாக அசோசியேட்டட் பிரஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் சியானில் உள்ள ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஜிஜிங் மருத்துவமனையின் ஜீனோ ட்ரான்ஸ்பிளாண்ட் குழுவைச் சேர்ந்த டாக்டர் லின் வாங், செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிரார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, நோயாளி குறிப்பிடத்தக்க வகையில் நன்றாக இருக்கிறார், மேலும் பன்றியின் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுகிறது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த சீன மருத்துவரின் அறிக்கை
ஜீனோ ட்ரான்ஸ்பிளான்ட்டின் அடுத்த கட்டமாக பன்றியின் கல்லீரலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய கற்றுக்கொள்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பன்றியின் கல்லீரல் 10 நாட்கள் செயல்புரிந்திருக்கிறது. அந்த கல்லீரலை அவரது உடல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. மனித கல்லீரல்களைப் போல இல்லாவிட்டாலும் பன்றியின் கல்லீரல் பித்தம் மற்றும் அல்புமினை உற்பத்தி செய்கிறது. இவை அடிப்படை உறுப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது.
கழிவுகளை அகற்றுதல், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகளை உடைத்தல், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், இரும்பை சேமித்தல் மற்றும் இரத்த உறைதலை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் காரணமாக கல்லீரல் ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது. “இது மனித உடலில் ஆரம்ப கட்ட செயல்பாடுகளை வழங்கும். இது செயலிழக்கும் மனித கல்லீரலை ஆதரிக்க அது போதுமானதாக இருக்கும் என்று வாங் கூறினார்.
பன்றியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் பரிசோதனை அணுகுமுறைகள்
கடந்த ஆண்டு அமெரிக்காவில், பென்சில்வேனியா பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரகங்கள் செயலிழந்து போகும் போது டயாலிசிஸ் செய்வது போல, மூளை இறந்த மனித உடலில் பன்றி கல்லீரலை வெளிப்புறமாக இணைத்து இரத்தத்தை வடிகட்ட பிரிட்ஜ் போன்ற அமைப்பை உருவாக்கினர். இறந்த நபரின் உடலில் உள்ள கல்லீரலை அகற்றப்படவில்லை. அதற்கு பதிலாக அதன் அருகே பன்றி கல்லீரலை பொருத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சீன மருத்துவர்களின் முயற்சி எதிர்காலத்தில் மாபெரும் மருத்துவ புரட்சிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.