மார்க்கெட்டில் வைத்து மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்.. கொஞ்சம் கூட கவலை இல்லை என பகீர் வாக்குமூலம்!
Husband Shoots Wife in Market | உத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்த மனைவியை குழந்தையை பராமரிக்க பணம் கேட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ, செப்டம்பர் 06 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) குடும்ப தகராறு காரணமாக கணவன், தனது மனைவியை மார்கெட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கணவனுடன் வாழ விருப்பமில்லாமல் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில், குழந்தையை பராமரிப்பதற்காக பணமும் கேட்டுள்ளார். இதன் காரணமாக தம்பதிக்கு இடையே பல காலமாக சிக்கல் நீடித்து வந்த நிலையில், அந்த நபர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குடும்ப தகராறு – மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் விஸ்வகர்மா. இவருக்கும் மம்தா சவுகான் என்ற பெண்ணுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தம்பதிக்கு 13 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இதனிடையே கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மம்தா கணவனை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது மம்தா விவாகரத்து கோரி விண்ணப்பித்ததாகவும், குழந்தையை பராமரிக்க பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Gurgaon Tragedy: திருமணத்திற்கு மீறிய உறவு, கொலை, துரோகம்.. குர்கான் டெய்லர் கொலை வழக்கு முழு விவரம்!




மார்க்கெட்டில் வைத்து மனைவியை சுட்ட கணவன்
இதன் காரணமாக இருவருக்கும் இடையே பல நாட்களாக சிக்கல் நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இந்த விவகாரம் காரணமாக விஸ்வகர்மா தனது மனைவியை சந்தித்து பேச சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுள்ளார். இதில் மம்தா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : 3 குழந்தைகளை கொன்ற தந்தை.. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆந்திராவில் ஷாக்
கொஞ்சம் கூட வருத்தமில்லை – கணவன் வாக்குமூலம்
இந்த விவகாரம் தொடர்பாக விஸ்வகர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், மம்தா தனது பணத்தை அழித்துக்கொண்டு இருந்தார் என்றும் அதற்காக தான் அவரை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தான் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்றும் அவர் பகீர் தகவலை கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.