இலங்கை தமிழர்கள் இனி இந்தியாவில் இருக்கலாம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
Sri Lankan Tamil Refugees : இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இனி இந்தியாவிலேயே தங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கை தமிழர்களுககு விலக்கு அளித்துள்ளது.

டெல்லி, செப்டம்பர் 04 : இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, 2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு, குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் தண்டனை விதிகளில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. 1980ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட போரால் தமிழர்கள் பல்வேறு நாடகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தன. குறிப்பாக தமிழகத்திற்கு லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். மேலும், பல்வேறு மாநிலங்களிலும் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், 2022 ஆம் ஆணடில் தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மறுவாழ்வு முகாம்களில் 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், 2025 ஏப்ரல் மாதம் மத்திய அரசு முக்கிய உத்தரவை விதித்திருந்தது.
Also Read : சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை பட்டியல் வெளியீடு.. வழக்கம் போல முதலிடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ்!




இலங்கை தமிழர்கள் இனி இந்தியாவில் இருக்கலாம்
அதாவது, குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025–ன்படி, பாஸ்போர்ட் அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் தங்குதலுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், இலங்கை தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு, இந்தியாவிற்கு வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சரியான பாஸ்போர்ட், பயண ஆவணங்கள், விசா இல்லாமல் இருப்பினும் குற்றவியல் நடவடிக்கையில் இருநது விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதோடு, குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் தண்டனை விதிகளில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது. இதன் மூலம், இலங்கை தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதமாட்டார்க என்றும் கூறியுள்ளது.
Also Read : வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர்.. முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி..
மேலும், டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மதம் சார்ந்த துன்புறுத்தல்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.