சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை பட்டியல் வெளியீடு.. வழக்கம் போல முதலிடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ்!
NIRF Ranking 2025 | கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெல்லி, செப்டம்பர் 04 : சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான NIRF (National Institutional Raking) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான இந்த பட்டியல் வெளியிடப்படும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் எந்த எந்த கல்வி நிறுவனங்கள் எந்த இடம் பிடித்துள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும். இந்த பட்டியலில் பல்கலைக் கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், ஆராய்ச்சி, மேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட சுமார் 13 பிரிவுகளின் கீழ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கற்றல், கற்பிக்கும் முறை, ஆராய்ச்சி, மாணவர்களின் வளர்ச்சி, கல்வி தரம் என பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இந்த தரவரிசை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி




வழக்கம் போல முதலிடம் பிடித்த மெட்ராஸ் ஐஐடி
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை என்ஐஆர்எஃப் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தப் பிரிவில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடிப்பது இது ஏழாவது முறை ஆகும். 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலிலும் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்திருந்தது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் பொறியியல் துறையிலும் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் கோவை அம்ரிதா பல்கலைக்கழகம் 8வது இடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க : திருப்பி அடிக்குமா இந்தியா? பதற்றத்தில் அமெரிக்க நிறுவனங்கள்.. வரியால் நடக்கும் குழப்பங்கள்!
சிறந்த பொது பல்கலைக்கழகங்களுக்கான பட்டியல்
சிறந்த பொது பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ள நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் 10வது இடம் பிடித்துள்ளது.
பல்மருத்துவப் பிரிவு
பல்மருத்துவப் பிரிவில், சென்னையில் உள்ள சவீதா பல் மருத்துவ கல்லூரி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.