President Speech: ‘இந்த 3 பிரிவினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்’ ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு!
Independence Day 2025 President Speech: நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். ஓராண்டில் இந்தியா ஏற்படுத்திய வளர்ச்சி குறித்து திரளெபதி முர்மு பேசினார். குறிப்பாக, ஜனநாயகமும் அரசியலமைப்பும் நமக்கு மிக முக்கியமானவை எனவும் முர்மு தெரிவித்தார்.

டெல்லி, ஆகஸ்ட் 14 : நாட்டின் 79வது சுதந்திர தினம் (Independence Day) 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (President Draupadi Murmu) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் இந்தியா ஏற்படுத்திய சாதனைகளை திரௌபதி முர்மு நினைவு கூர்ந்தார். அவர் பேசுகையில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஒவ்வொரு இந்தியராலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். இந்த நாட்கள் நாம் பெருமைப்படும் இந்தியர்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் உள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
நல்லாட்சி மூலம் ஏராளமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்ந்துள்ளனர். மீண்டும் வறுமைக் கோட்டிற்குக் கீழே யாரும் வரக்கூடாது என்பதற்காக, அரசாங்கம் தொடர்ச்சியான நலத்திட்டங்களை செய்து வருகிறது. ஜனநாயகத்தின் பாதையில் நாம் முன்னேறிச் செல்கிறோம். அனைவருக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டது. சவால்கள் இருந்தபோதிலும், இந்திய மக்கள் ஜனநாயகத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைப்பது முற்றிலும் சரியானது. ஜனநாயகமும் அரசியலமைப்பும் நமக்கு மிக முக்கியமானவை. நமது ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் நான்கு தூண்களாக, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு விழுமியங்கள் உள்ளன.




Also Read : இனி இரவில் ரயிலில் நிம்மதியாக பயணிக்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு
3 பிரிவினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்
செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாகும். இது ஏற்கனவே நம் வாழ்வில் நுழைந்துள்ளது. நாட்டின் ஏஐ திறன்களை வலுப்படுத்த அரசு தொடர்ந்து முயச்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் குறிப்பிட்ட தேவைகளுக்கு பதிலளிக்கும் ஏஐ மாதிரிகளை உருவாக்கவும் இது உதவுகிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா செயற்கை நுண்ணறிவின் மையமாக மாறும். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது. சமூகத்தில் மூன்று பிரிவினர் நம்மை இந்தப் பாதையில் வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்.
இளைஞர், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமாக இருப்பார்கள். நமது இளைஞர்கள் தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான சரியான சூழலை இறுதியாகக் கண்டறிந்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கை மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
தமிழக செஸ் வீரர்களை பாராட்டிய ஜனாதிபதி
விளையாட்டுத் துறையில் இந்திய மாற்றங்களை கண்டுள்ளது. உலக சாம்பியனாக 18 வயதான குகேஷ் வெற்றி பெற்றது செஸ் வீரர்களிடையே ஊக்கத்தை கொடுத்தது. ஆர். பிரக்ஞானந்தா, ஆர். வைஷாலி, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி போன்றோர் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வலுவான செயல்திறனை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
பஹல்காமில் அப்பாவி குடிமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை ‘கோழைத்தனமானது மற்றும் முற்றிலும் மனிதாபிமானமற்றது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் ஒரு தீர்க்கமான முறையில் மற்றும் உறுதியுடன் இருந்தது. நாட்டைப் பாதுகாப்பதில் எந்த ஒரு சூழ்நிலையையும் சந்திக்க நமது ஆயுதப் படைகள் தயாராக உள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியது.
Also Read : செங்கோட்டை சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
ராணுவத்திற்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்தில் ஒரு எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை வரலாற்றில் இடம்பிடிக்கும். நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட வலியை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. மக்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கத் தயங்காது என்ற இந்தியாவின் கொள்கையை உலக நாடுகள் கவனத்தில் கொண்டுள்ளது” எனக் கூறினார்.