Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செங்கோட்டை சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

India's 79th Independence Day | ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா கொண்டாடத்தில் பங்கேற்க டிக்கெட் முன்பதிவு செய்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

செங்கோட்டை சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Aug 2025 19:36 PM

இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவை இன்னும் ஒருசில நாட்களில் (79th Independence Day) கொண்டாட உள்ளது. 79வது சுதந்திர தின விழாவை கோலகலமாக கொண்டாட ஒட்டுமொத்த இந்தியாவுமே தயாராகி வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல முக்கிய இடங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகவும் கோலாகலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூன்று விதமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன

ஆகஸ்ட் 15, 2025 அன்று காலை சரியாக 7.30 மணிக்கு செங்கோட்டையில் பிரதம் நரேந்திர மோடி கொடியேற்ற உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் நிகழ்வில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் விரைந்து தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

இந்த  சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பொதுமக்களிடம் மூன்று விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

  • வகை 1 : ஒரு நபருக்கு ரூ.20 கட்டணம்.
  • வகை 2 : ஒரு நபருக்கு  ரூ.100 கட்டணம்.
  • வகை 3  : ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம்.

இதையும் படிங்க : Independence Day : 78வது அல்லது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா?.. குழப்பத்துக்கு அரசு விளக்கம்!

சுதந்திர தின விழா டிக்கெட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதற்கு முதலில் அரசின் aamantran.mod.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Online Ticket Booking for Independence Day 2025 என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு அதில் கேட்கபட்டுள்ள பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
  4. அதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  5. எத்தனை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறீர்கள், எந்த வகை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறீர்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
  6. பிறகு அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி மிக சுலபமாக சுதந்திர தின விழா டிக்கெட்டை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை பொதுமக்கள் பிரிண்ட் எடுத்தோ அல்லது மொபைல் போனில் டிஜிட்டல் முறையாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.