Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. பெங்களூருவில் போக்குவரத்து மாற்றம்..

PM Modi Visit to Bengaluru: பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 10, 2025) அன்று பெங்களூருவில் இருக்கும் மஞ்சல் நிற வழித்தட வந்தே பாரத் ரயிலை திறந்து வைக்கிறார். இதற்காக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. பெங்களூருவில் போக்குவரத்து மாற்றம்..
பிரதமர் மோடி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Aug 2025 14:19 PM

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 9, 2025) நம்ம மெட்ரோவின் மஞ்சள் நிர பாதையை திறந்து வைக்கிறார். இதற்காக, வாகன போக்குவரத்து மற்றும் பார்க்கிங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு போக்குவரத்து காவல்துறை (BTP) அறிவித்துள்ளது. முதலமைச்சர் அலுவலகம் பகிர்ந்து கொண்ட பயணத்திட்டத்தின்படி, பிரதமர் மோடி பெங்களூருவில் நான்கு மணி நேரம் தங்கியிருந்து, மூன்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பிரதமர் ஹெலிகாப்டர் மற்றும் சாலை வழியாக KSR பெங்களூரு (நகரம்) ரயில் நிலையத்திற்கு பயணம் மேற்கொள்வார்.

பயணத்திட்டம் என்ன?

பின்னர் KSR பெங்களூரு – பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரி மற்றும் அஜ்னி (நாக்பூர்)-புனே ஆகிய மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் மஞ்சள் பாதையில் உள்ள ராகிகுடா மெட்ரோ நிலையத்திற்கு சாலை வழியாக பயணிப்பார். காலை 11.45 மணி முதல் மதியம் 12.50 மணி வரை, ராகிகுடாவிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வரை மெட்ரோவில் பயணிக்கிறார். மதியம் 12.50 மணிக்கு, அவர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மெட்ரோ நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி கட்டம் 1 இல் அமைந்துள்ள பெங்களூரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) க்கு சாலை வழியாக பயணம் மேற்கொள்கிறார்.

IIITB அரங்கத்தில், அவர் மஞ்சள் பாதையைத் திறந்து வைத்து, நம்ம மெட்ரோவின் 3 ஆம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் ஹெலிகாப்டரில் விமான நிலையத்திற்குச் சென்று, பிற்பகல் 2.45 மணிக்கு டெல்லிக்குச் புறப்பட்டு செல்கிறார். மெட்ரோ தொடக்க விழாவில் அதிக எண்ணிக்கையிலான பிரமுகர்கள் மற்றும் குடிமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து மற்றும் பார்க்கிங் கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்:

காலை 8.30 மணி முதல் நண்பகல் வரை

  •  மாரேனஹள்ளி மெயின் ரோடு: ராஜலட்சுமி சந்திப்பில் இருந்து மாரேனஹள்ளி 18வது மெயின் ரோடு வரை.
  • மாரேனஹள்ளி கிழக்கு முனை பிரதான சாலை சந்திப்பிலிருந்து அரவிந்த் சந்திப்பு வரை.
  • காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை
  • .சில்க் போர்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை மற்றும் ஓசூர் சாலை வழியாக ஓசூர் நோக்கி. ஓசூரில் இருந்து பெங்களூரு நோக்கி.
  • இன்ஃபோசிஸ் அவென்யூ, வேலங்கானி சாலை மற்றும் ஹெச்பி அவென்யூ சாலை போன்ற எலக்ட்ரானிக்ஸ் சிட்டி கட்டம் 1 இல் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்

மாற்று வழிகள் என்ன?

  • 4வது பிரதான சாலையிலிருந்து ஜெயதேவா மருத்துவமனை சந்திப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் ராஜலட்சுமி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, சரக்கி பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி, ஐஜி வட்டம், ஆர்.வி. பல் மருத்துவம் வழியாகச் சென்று, 8வது பிரதான சாலை-9வது குறுக்கு சந்திப்பு வழியாக ஜெயதேவா மருத்துவமனை சந்திப்பு/பன்னேர்கட்டா சாலையை அடையலாம்.
  • அதேபோல், கிழக்கு முனை வட்டத்திலிருந்து பனசங்கரி நோக்கிச் செல்லும் வாகனங்கள் 29வது பிரதான சாலையில் சென்று, 28வது பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி, 8வது பிரதான சாலை-9வது குறுக்கு சந்திப்பை அடைந்து, டெல்மியா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, வெளிப்புற வளையச் சாலை வழியாகத் தொடர்ந்து, சரக்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, கனகபுரா சாலை மற்றும் பனசங்கரி நோக்கிச் செல்லலாம்.
  • மேலும், ஓசூர் சாலையிலிருந்து கனகபுரா சாலை, மைசூர் சாலை மற்றும் தும்கூர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பொம்மசந்திரா சந்திப்பிலிருந்து ஜிகானி சாலையைத் திரும்பி, பன்னர்கட்டா சாலை வழியாக நைஸ் சாலையை அடைந்து மேலும் பயணிக்க வேண்டும். NICE சாலையில் ஒசூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் பன்னர்கட்டா சந்திப்பில் இருந்து வெளியேறி ஜிகனி சாலை வழியாகச் சென்று பொம்மசந்திரா சந்திப்பு வழியாக ஒசூர் சாலையை அடைய வேண்டும்.
  • ஒசூர் சாலையில் இருந்து சர்ஜாபூர் சாலை, வர்தூர், வைட்ஃபீல்ட் மற்றும் ஹோஸ்கோட் நோக்கி செல்லும் வாகனங்கள் சந்தாபுரா சந்திப்பிலிருந்து தொம்மசந்திரா சாலை வழியாக சர்ஜாபூர் சாலையை அடைந்து தொடர்ந்து செல்ல வேண்டும். எச்.எஸ்.ஆர் லேஅவுட், கோரமங்கலா, பெல்லந்தூர், வைட்ஃபீல்ட் மற்றும் நகரப் பகுதிகளிலிருந்து ஓசூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், சந்தாபுரா வழியாக சர்ஜாபூர் சாலையில் சென்று ஒசூரை அடைய வேண்டும்.
  • எலக்ட்ரானிக்ஸ் சிட்டி கட்டம் 1-ல் உள்ள வாகனங்கள் 2வது குறுக்கு சாலை, ‘ஷிகாரிபாளையா சாலை, ஹுலிமங்கலா சாலை மற்றும் கொல்லஹள்ளி சாலை வழியாக செல்ல வேண்டும்.
  • ராஜலட்சுமி சந்திப்பிலிருந்து மாரேனஹள்ளி பிரதான சாலை வழியாக ஜெயதேவா மருத்துவமனை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் பனசங்கரி பேருந்து நிலையப் பக்கத்திலிருந்து இடதுபுறம் திரும்பி சரக்கி மார்க்கெட் சாலை/9வது குறுக்கு சாலை வழியாக ஐஜி வட்டம், ஆர்.வி. பல் சந்திப்பு வழியாகச் சென்று 8வது பிரதான சாலை-9வது குறுக்கு சாலை சந்திப்பு வழியாக ஜெயதேவா மருத்துவமனை’ சந்திப்பை அடையலாம்.