ரக்ஷா பந்தன்.. பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி கொண்டாடிய பள்ளி குழந்தைகள்!
PM Modi Celebrates Raksha Bandhan : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி தனது இல்லத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். பிரதமர் மோடியின் கையில் பள்ளிக் குழந்தைகள் ராக்கி கயிற்றை கட்டினர்.

டெல்லி, ஆகஸ்ட் 09 : டெல்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி (PM Modi) ரக்ஷா பந்தனை (Raksha Bandhan) கொண்டாடினார். பள்ளிக் குழந்தைகள், பெண்களுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் கொண்டாடினார். பள்ளிக் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பிரதமர் மோடி கையில் ராக்கி கட்டி கொண்டாடினர். நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று ரக்ஷா பந்தன் கொண்டாட்டப்பட்டு வருகிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பை வெளிப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக ரக்ஷா பந்தன் கொண்டாட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.




சகோதரத்துவத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகிளில் ராக்கி கயிற்றை காட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். சகோதரர்கள் நீண்ட காலம் நன்றாக இருப்பதற்கும், தங்களுடன் ஒற்றுமையாக இருக்கவும் வேண்டி, இந்த ரக்ஷழ பந்தன் கயிற்றை பெண்கள் கட்டி இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இது உடன்பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமில்லாமல், உடன்பிறவா சகோதர்களுக்கு பெண்கள் ராக்கி கயிற்றை கட்டி கொண்டாடி வருகின்றனர். இது சகோதரத்துவ உறவினை போற்றும் விதமாக அமைகிறது.
Also Read : மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. பெங்களூருவில் போக்குவரத்து மாற்றம்..
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
Here are highlights from a very special Raksha Bandhan celebration earlier today. Gratitude to our Nari Shakti for their continuous trust and affection. pic.twitter.com/MeO3KJsXew
— Narendra Modi (@narendramodi) August 9, 2025
இந்த நாளில், பிரதமர் மோடி தங்கள் வீடுகளில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தனை கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் பிரதமர் மோடிக்கு பள்ளிக் குழந்தைகள் ராக்கி கயிற்றை கட்டி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தனது இல்லத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடினார்.
Also Read : உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்
பள்ளிக் குழந்தைகள் பிரதமர் மோடியின் கையில் ராக்கி கயிற்றை கட்டியும் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சகோதரராக எண்ணி அவரது கையில் சில பெண்களும் ராக்கி கயிற்றை கட்டி கொண்டாடினார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.