Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Independence Day : 78வது அல்லது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா?.. குழப்பத்துக்கு அரசு விளக்கம்!

Independence Day Celebration | இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இது 78 அல்லது 79வது சுதந்திர தினவிழா என பொதுமக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

Independence Day : 78வது அல்லது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா?.. குழப்பத்துக்கு அரசு விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Aug 2025 16:31 PM

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா (Independence Day) கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், அன்றைய தினம் சுதந்திர தின விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்னும் ஒருசில நாட்களில் இந்தியாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இது எத்தனையாவது சுதந்திர தின விழா என பொதுமக்கள் மத்தியில் விவாதம் எழ தொடங்கியுள்ளது. அதாவது சிலர் இது இந்துயாவுக்கு 78வது சுதந்திர தின விழா என்றும் சிலர் 79வது சுதந்திர தின விழா என்றும் கூறுகின்றனர். உண்மையில் இந்தியாவுக்கு இது எத்தனையாவது சுதந்திர தினவிழா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எத்தனையாவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா

இந்தியாவை பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்துக்கொண்டிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் விளைவாக ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த தினத்தை தான் சுதந்திர தின விழாவாக கொண்டாடி வருகிறோம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைந்த அன்றைய தினமே முதலாம் ஆண்டு என்றால் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினம் இந்தியாவின் 79வது சுதந்திரமாக இருக்கும். இதுவே 1947-ல் சுதந்திரம் பெற்று அதற்கு ஒரு ஆண்டு கழித்து முதலாம் ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டால் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா இந்தியாவின் 78வது சுதந்திர தினவிழாவாக இருக்கும் என பொதுமக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவிடம் இருந்து ஆயுத கொள்முதலை நிறுத்தும் இந்தியா? – உண்மை என்ன?

78 அல்லது 79வது சுதந்திர தினவிழா – பிரதமர் அலுவலகம் முக்கிய தகவல்

பொதுமக்கள் மத்தியில் எத்தனையாவது சுதந்திர தினவிழா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பிஐபி (PIB – Press Information Bureau) மூலம் பிஎம்ஓ (PMO – Prime Minister Office) அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்தியா தனது 79வது சுதந்திர தினவிழாவை கொண்டாட உள்ளதாக கூறியுள்ளது.

பிரதமர் மோடி எக்ஸ் பதிவு

ஒவ்வொரு ஆண்டும் குடிமக்களை மூவர்ண கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுக்கும் நிலையில், இந்த ஆண்டும் அவர் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.