Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பீகாரில் டிரம்ப் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் – ஆச்சரிய சம்பவம்

Trump in Bihar?: பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பீகாரில் டிரம்ப் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் – ஆச்சரிய சம்பவம்
டொனால்ட் டிரம்ப்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Aug 2025 21:26 PM

பீகார் மாநிலத்தில் குடியிருப்பு சான்றிதழை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), பீஹாரில் (Bihar) குடியுரிமை சான்றிதழ் கேட்டு கடந்த ஜூலை 29, 2025 அன்று விண்ணப்பித்த சம்பவம், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீகாரில் மொய்தீன் நகர் மாவட்டம், ஹசன்பூர் கிராமம், 13 ஆம் நம்பர் வார்டு என்ற முகவரியுடன், டிரம்ப்பின் பெயர் மற்றும் புகைப்படத்துடன், குடியிருப்பு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் ஒன்று சமர்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையில் அது போலியான விண்ணப்பம் என தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சைபர் கிரைம் (Cyber Crime) காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலியான விண்ணப்பத்தால் சர்ச்சை

பீகாரின் சாமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் குடியுரிமை சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. ஹசன்பூர், வார்டு எண் 13, பாகர்பூர் தபால் நிலையம், மொயிதின் நகர் காவல் நிலைய எல்லை, சாமஸ்திபூர் மாவட்டம் என்ற முகவரியுடன் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் டிரம்ப்பின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சரிபார்த்த அதிகாரிகள் புகைப்படம், ஆதார் எண், பார்கோட், முகவரி ஆகிய அனைத்தும் போலியானது என தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து அந்த விண்ணப்பத்தை சரிபார்த்த அதிகாரிகள் அது போலியானது என கண்டறிந்திருக்கின்றனர். இதனையடுத்து விண்ணப்பித்த நபரின் ஐபி அட்ரஸ் உள்ளிட்ட வை அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

போலியான பெயர்களில் குடியிருப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

இப்படி போலியான அடையாளங்களுடன் குடியிருப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே டாக்டர் பாபு, நிதிஷ் குமாரி, சோனாலிகா டிராக்டர் என்ற வித்தியாசமான பெயர்களிலும் விண்ணப்பங்கள் பதிவாகியிருந்தன. இந்த மோசடிகள், அரசின் பலவீனமான இணைய நெட்வொர்க்கை காட்டுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதனையடுத்து இனி டிஜிட்டல் ஆவண சரபார்ப்பு முறையில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும் எனவு புதிய வலுவவான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலைில்  இப்படியான விவகாரங்கள் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை பாதிப்பதோடு, சைபர் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.