ஆகஸ்ட் 15 இந்தியாவை போலவே இந்த நாடுகளுக்கும் சுதந்திர தின விழா தான்.. பட்டியல் இதோ!
Countries Celebrating Independence | ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. இந்தியா மட்டுமன்றி மேலும் சில நாடுகளும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்றன. அவை எவை என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஆகஸ்ட் 15, 2025 அன்று சுதந்திர தின விழா (Independence Day) கொண்டாடப்பட உள்ளது. பிரிட்டிஷ் இடம் இருந்து ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், அன்றைய தினம் இந்தியாவுக்கான சுதந்திர தினமாக உள்ளது. இந்த நிலையில், இந்தியா மட்டுமல்லாமல் மேலும் சில நாடுகளும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவை தவிர வேறு எந்த எந்த நாடுகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
79வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்தியா
ஆகஸ்ட் 15, 1947 ஆம் அன்று பிரிட்டிஷ் இடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. இதன் காரணமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அனத வகையில் 2025-ல் இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த நிலையில், மேலும் சில நாடுகள் நாடுகளும் ஆகஸ்ட் 15, 2025 அன்று தங்களது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளன.
இதையும் படிங்க : செங்கோட்டை சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?




ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடும் நாடுகள்
காங்கோ
1880 ஆம் ஆண்டு முதல் காங்கோவை பிரான்ஸ் அடிமைப்படுத்த தொடங்கியது. இந்த நிலையில், ஆகஸ்ட் 15, 1960 அன்று பிரான்ஸ் தனது படைகளை காங்கோவில் இருந்து திரும்ப பெற்றது. அன்றைய தினம் பிரான்ஸ் இடம் இருந்து காங்கோ விடுதலை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதியை காங்கோ சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
தென்கொரியா மற்றும் வடகொரியா
இரண்டாம் உலக போருக்கு பிறகு கொரியா மீதான ஜப்பானின் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானிடம் இருந்து விடுதலை பெற்ற நிலையில், தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடுகின்றன.
இதையும் படிங்க : Independence Day : 78வது அல்லது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா?.. குழப்பத்துக்கு அரசு விளக்கம்!
லிச்சென்ஸ்டீன்
லிச்சென்ஸ்டீன் உலகின் மிக சிறிய நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாடு ஜெர்மனியால் ஆளப்பட்ட நிலையில், 1866 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அது முதலே ஆகஸ்ட் 15 ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.