சுதந்திர தினம் 2025: மத்திய அரசின் ஹர் கர் திரங்கா போட்டியில் பங்கேற்பது எப்படி?
Independence Day 2025: சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசால் ஹர் கர் திரங்கா என்ற பெயரில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி அதனை போட்டோவாக எடுத்து பதிவிட வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்ட ஹர் கர் திரங்கா (Har Ghar Tiranga) இயக்கம், இந்த ஆண்டும் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை (Independence Day) முன்னிட்டு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆகஸ்ட் 2 முதல் 15, 2025 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி, தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நினைவு கூறுவது இந்த இயக்கத்தின் நோக்கம். இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, அதன் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் #HarGharTiranga என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து, தேசபக்தி உணர்வை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்கின்றனர்.
சைக்கிள் பேரணி
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஹர் கர் திரங்கா இயக்கத்துடன் சைக்கிள் பேரணி பல நகரங்களில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரும் தங்கள் சைக்கிளில் தேசியக் கொடியை வைத்து தேசப் பக்தி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டெல்லியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் சேகாவத், கிரண் ரிஜு மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் டெல்லி சட்டமன்றத்தில் இருந்து ராஜ்காட் வரை சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
இதையும் படிக்க: செங்கோட்டை சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?




பங்கேற்பது எப்படி?
ஹர் கர் திரங்கா என்ற இந்த போட்டியில் எப்படி பங்கேற்பது என்பது குறித்து பார்க்கலாம்.
-
harghartiranga.com என்ற இணையதளத்திற்கு சென்று பெயர், செல்போன் எண், மாநிலம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
-
பின்னர், வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி, புகைப்படம் எடுக்க வேண்டும்.
-
அந்த புகைப்படத்தை harghartiranga.com என்ற தளத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.
- போட்டோவை அப்டோல் செய்தவர்களுக்கு டிஜிட்டல் பேட்ஜ் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் ஹர்கர் திரங்கா தூதர் ஆகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்.
இதையும் படிக்க : Independence Day : 78வது அல்லது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா?.. குழப்பத்துக்கு அரசு விளக்கம்!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஏலூர் பகுதியில் SETWEL அமைப்பு நடத்திய ஊர்வலத்தின் போது, 100 அடி நீளமுள்ள தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கே. வெற்றி செல்வி, இந்த நிகழ்ச்சி தேசபக்தி, தேசிய ஒற்றுமை, பெருமை ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துசொல்வதாக கூறினார்.
பிரதமர் பாராட்டு
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சமூக ஊடகப் பதிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, #HarGharTiranga நாடு முழுவதும் கிடைத்து வரும் வரவேற்பை பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இது நம் மக்களின் ஆழ்ந்த தேசபக்தி உணர்வையும், தேசிய கொடியின் மீது அவர்கள் கொண்டுள்ள மரியாதையயும் காட்டுகிறது. . புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகளை தொடர்ந்து harghartiranga.com-ல் பகிருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.