Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வந்தே பாரத், மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. பெங்களூருவில் போக்குவரத்து மாற்றம்..

PM Narendra Modi Visit To Bengaluru: பெங்களூரு வரும் பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு வந்தே பாரத் ரயிலை காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கிறார். மேலும், மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் நிற பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

வந்தே பாரத், மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. பெங்களூருவில் போக்குவரத்து மாற்றம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Aug 2025 06:30 AM

பெங்களூரு, ஆகஸ்ட் 10, 2025: இன்று (ஆகஸ்ட் 10, 2025) பெங்களூருக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு வந்தே பாரத் ரயிலை காலை 11 மணியளவில் நகரின் கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அமிர்தசரஸில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் நாக்பூர் (அஜ்னி) முதல் புனே வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். அதன்பிறகு, பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தை அவர் திறந்து வைப்பார் .

மேலும், ஆர்வி சாலையிலிருந்து (ராகிகுடா) எலக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ நிலையம் வரை மெட்ரோவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பெங்களூரு மெட்ரோ கட்டம் – 2 திட்டம் (ஆர்.வி. சாலை முதல் பொம்மசந்திரா வரை) 16 நிலையங்களுடன் 19 கி.மீ. வரை ரூ. 7,160 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் பாதை திறக்கப்பட்டதன் மூலம், பெங்களூருவில் செயல்பாட்டு மெட்ரோ நெட்வொர்க் 96 கி.மீ.க்கும் ஆக அதிகரிக்கும்.

3 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டதிற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி:

அதனை தொடர்ந்து, பிற்பகல் 1 மணியளவில், பிரதமர் மோடி பெங்களூருவில் பல நகர்ப்புற இணைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக, ரூ.15,610 கோடி மதிப்பில் பெங்களூரு மெட்ரோ கட்டம் – 3 திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த பாதை நீளம் 44 கி.மீட்டராகும், இதில் 31 உயர்த்தப்பட்ட நிலையங்கள் இருக்கும்.

மேலும் படிக்க: ரக்ஷா பந்தன்.. பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி கொண்டாடிய பள்ளி குழந்தைகள்!

போக்குவரத்து மாற்றம்:

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பின்வரும் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

  • கே.எஸ்.ஆர் ரயில்வே பிளாட்ஃபார்ம் எண். 7 மற்றும் 8 இலிருந்து கோட் அண்டர்பாஸ் வழியாகவும், கோட் சர்க்கிளிலிருந்து மகாராணி பாலம் வரையிலும் அனைத்து வகையான வாகனங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு மாற்றாக, பயணிகள் எல்டிபி சாலை, காட்டன்பேட்டை பிரதான சாலை, மைசூர் சாலை மற்றும் மகடி பிரதான சாலையைப் பயன்படுத்தலாம்.
  • சாந்தலா சந்திப்பிலிருந்து கோடே சந்திப்பு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். மேலும், BMTC மற்றும் KSRTC வெளியேறும் பக்கத்திலிருந்து கோடே சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும். அதற்கு மாற்றாக, LTP சாலை மற்றும் காட்டன்பேட்டை பிரதான சாலை வழியாக செல்ல வேண்டும்.
  • மைசூர் வங்கியிலிருந்து சாளுக்கிய வட்டம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், கே.ஜி. சாலை, மைசூர் வங்கி சந்திப்பு, சாகர் சந்திப்பு, கே.ஜி. சந்திப்பு, எலைட், டி.பி. சாலை, ராஜீவ் காந்தி வட்டம் வழியாக செல்ல வேண்டும்.
  • காளிதாசர் சாலையில் கனகதாசர் சந்திப்பிலிருந்து சுதந்திர பூங்கா நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், கனகதாச சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சாகர் சந்திப்பை நோக்கி நகரலாம்.
  • மௌரியா/சுப்பன்னா சந்திப்பிலிருந்து சுதந்திர பூங்கா நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், சுப்பண்ணா சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி ஆனந்த் ராவ் வட்டம் நோக்கிச் செல்லலாம்.
  • லால்பாக் பிரதான வாயிலிலிருந்து லால்பாக் மேற்கு வாயில் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், லால்பாக் பிரதான வாயிலுக்கு முன்னால் இடதுபுறம் திரும்பலாம் அல்லது ஜே.சி. சாலை வழியாக வலதுபுறம் திரும்பலாம்.