இனி இரவில் ரயிலில் நிம்மதியாக பயணிக்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு
Indian Railways Rule : இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நிம்மதியாக பயணிக்கும் வகையில் புதிய அறிவிப்புகளை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய ரயில் (Train) போக்குவரத்தைக் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் (India) எந்த மூலைக்கும் குறைவான கட்டணத்தில் ரயிலில் பயணிக்க முடியும். குறிப்பாக நீண்ட நேர பயணங்களுக்கு பெரும்பாலும் ரயிலையே தேர்ந்தெடுக்கின்றனர். ரயிலில் பயணிக்கும் ஒரு பெரிய பிரச்னை எந்த நேரமும் பரிசோதகர் நம்மிடம் வந்து டிக்கெட் கேட்கலாம். குறிப்பாக சில நேரங்களில் இரவில் நம் தூங்கும் நேரத்தில் கூட வரலாம். இதனால் நம் தூக்கம் பாதிக்கும். இனி இந்த சிக்கல் இருக்காது. அதாவது இரவில் குறிப்பிட்ட 8 மணி நேரத்திற்கு டிக்கெட் பரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம்.
இரவில் டிக்கெட் பரிசோதனைக்கு தடை
புதிய ரயில்வே விதிமுறைகளின்படி, ஸ்லீப்பர் மற்றும் ஏசி பயணிகள் வண்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை டிக்கெட் சோதனை செய்ய டிக்கெட் பரிசோதகருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் பயணிகள் அமைதியாக உறங்குவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு விதி விலக்கு உண்டு.
ஒரு பயணி இரவு 10 மணிக்கு பிறகு ரயிலில் ஏறினால் அவரிடம் டிக்கெட் பரிசோதிக்கலாம். ஆனால் ஏற்கனவே பயணித்து வருபவர்களை எழுப்பி டிக்கெட் கேட்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிக்க : ரயில்வேயில் கடும் போட்டி.. 64,197 பணியிடங்களுக்கு 1.87 கோடி பேர் விண்ணப்பம்!
தேவையில்லாமல் சோதனை செய்தால் புகார் தெரிவிக்கலாம்
டிக்கெட் பரிசோதகர் இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்தாலோ அல்லது தவறான முறையில் நடந்துகொண்டாலோ பயணிகள் 139 என்ற ரயில் உதவி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். இந்த எண் 24 மணி நேரமும் செயல்படும். பயணிகளுக்கு சிறப்பான பயணம் கிடைக்க இந்தியன் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இரவில் 10 மணிக்கு பிறகு ரயிலில் ஏறினால் உங்களிடம் பரிசோதகர் டிக்கெட் பரிசோனை செய்யலாம்.
இதையும் படிக்க: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 20 சதவீதம் தள்ளுபடி.. எப்போது? யார் யாருக்கு?
இரவு பயணிகளுக்கான கூடுதல் விதிமுறைகள்
இரவில் பயணிகள் நிம்மதியாக தூங்குவதற்கு ஏதுவாக ரயிலின் முக்கிய விளக்குகள் அணைக்கப்படும். மேலும் இரவில் ஹெட்போன் இல்லாமல் வீடியோ பார்ப்பது மற்றும் மியூசிக் கேட்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல அடுத்தவர்கள் தூக்கத்தை பாதிக்கும் அளவுக்கு உரத்த குரலில் பேசுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவில் சுத்தம் செய்யும் பணியாளர்கள் தேவையில்லாமல் வரக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.