ரயில்வேயில் கடும் போட்டி.. 64,197 பணியிடங்களுக்கு 1.87 கோடி பேர் விண்ணப்பம்!
Railway Recruitment Board : 2024ஆம் ஆண்டில் மட்டும் 64,197 காலிப் பணியிடங்களுக்கு 1.87 கோடிக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் போன்ற பதவிகளுக்கு ஒரு காலியிடத்திற்கு 1,076 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி, ஆகஸ்ட் 13 : 2024ஆம் ஆண்டில் மட்டும் 64,197 காலிப் பணியிடங்களுக்கு 1.87 கோடிக்கு அதிகமானோர் (Railway Exam) விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் (Railway Ministry) தெரிவித்துள்ளது. ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் போன்ற பதவிகளுக்கு ஒரு காலியிடத்திற்கு 1,076 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ரயில்வேயில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆர்ஆர்பி எனும் ரயில்வே வாரியம் ஆண்டுதோறும் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், பணியிடங்களுக்கு ஆட்களையும் நிரப்பி வருகிறது. இப்படியான சூழலில், ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, 2024ஆம் ஆண்டில் மட்டும் 64,197 காலிப் பணியிடங்களுக்கு 1.87 கோடிக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே பணிகள் குறித்து கூறுகையில், ”RPF கான்ஸ்டபிள் பதவி மிகவும் விரும்பப்பட்ட பதவியாக இருந்தது. RPF கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 45.3 லட்சம் விண்ணப்பித்து இருந்தன. ஒரு பதவிக்கு 1,076 க்கும் மேற்பட்ட விண்ணப்பித்து இருந்தன. டெக்னீஷியன் பதவிகளுக்கு 14,298 பதவிகளுக்கு 26.99 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதே நேரத்தில் உதவி லோகோ பைலட் (ALP) பதவிக்கு 18,799 காலியிடங்களுக்கு 18.4 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.




Also Read : குழந்தைகளுக்காக வாங்கிய பப்ஸில் சுருண்டு கிடந்த பாம்பு.. அதிர்ச்சியான பெண்!
64,197 பணியிடங்களுக்கு 1.87 கோடி பேர் விண்ணப்பம்
ஒரு டெக்னீஷியன் பதவிக்கு சுமார் 189 விண்ணப்பதாரர்களும், உதவி லோகோ பைலட் பணிக்கு கிட்டத்தட்ட 98 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ALP மற்றும் JE/DMS/CMA க்கான CBTகளின் இரண்டாம் கட்ட தேர்வுகளும் நிறைவடைந்துள்ளன. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. 14,298 காலியிடங்களில் இதுவரை 9,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.
2004 மற்றும் 2014 க்கு இடையில், ரயில்வே 4.11 லட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 2014 முதல் 2025 வரை, அந்த எண்ணிக்கை 5.08 லட்சமாக உயர்ந்துள்ளது. கிட்டதட்ட ஒரு லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read : ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!
முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேர்வுகள் போன்ற சீர்திருத்தங்களே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் செயல்முறை வேகமாகவும், கணிக்கக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் உள்ளது. குறிப்பாக, இந்த காலகட்டத்தில் வினாத்தாள் கசிவுகள் அல்லது முறைகேடுகள் எதுவும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.