Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குழந்தைகளுக்காக வாங்கிய பப்ஸில் சுருண்டு கிடந்த பாம்பு.. அதிர்ச்சியான பெண்!

Woman Finds Snake In Snak : தெலங்கானவில் பேக்கரியில் வாங்கிய பப்ஸில் பாம்பு கிடந்தது பார்த்து பெண் அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளுக்காக பேக்கிரி வாங்கிய நிலையில், அதில் பாம்பு கிடந்துள்ளது. இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்ததை அடுத்து, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

குழந்தைகளுக்காக வாங்கிய பப்ஸில் சுருண்டு கிடந்த பாம்பு.. அதிர்ச்சியான பெண்!
பப்ஸில் கிடந்த பாம்பு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Aug 2025 12:08 PM

தெலங்கானா, ஆகஸ்ட் 13 :  தெலங்கானாவில் பேக்கிரி ஒன்றில் சிக்கன் பப்ஸில்  பாம்பு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்காக பப்ஸ் வங்கிய பெண், அதில் இருந்து பாம்பு கிடந்தது குறித்து புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட பேக்கிரி மீது புகார் அளித்ததை அடுத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் காலங்களில் ஹோட்டல்கள், பேக்கிரி போன்ற கடைகளில் வாங்கும் உணவுகளில் பூச்சி போன்றவை கிடந்து வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றன. இருப்பினும், பல்வேறு ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது குறித்து மக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.  இது தொடர்பாகவும் மக்களும் புகார் அளித்து வருகின்றனர். இதனை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான், தெலங்கானாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்  நடந்துள்ளது. 

அதாவது, தெலங்கானாவில் பேக்கிரி ஒன்றில் சிக்கன் பப்ஸில்  பாம்பு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீசைலா என்ற பெண், 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதியான நேற்று தனது குழந்தைகளுக்கா ஒரு முட்டை மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கி இருக்கிறார். பப்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பப்ஸ் பார்சலை திறந்துள்ளார்.

Also Read : ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!

குழந்தைகளுக்காக வாங்கிய பப்ஸில் கிடந்த பாம்பு


அப்போது, பப்ஸை குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வெட்டி இருக்கிறார். அப்போது, அதில் பாம்பு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதை எடுத்துக் கொண்டு நேராக அந்த பேக்கரிக்கே சென்றிருக்கிறார். ஆனால், பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த பெண் ஸ்ரீசைலா, னதது தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஜாட்செர்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Also Read : மனைவியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கணவர்.. நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

எனவே, சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று நடப்பது முதல்முறையல்ல.   பல்வேறு மாநிலங்களில் உணவு ஆரோக்கியமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.