Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெலங்கானா ரசாயன ஆலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!

Hyderabad Chemical Blast : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தெலங்கானா ரசாயன ஆலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!
ஹைதராபாத் ரசாயன ஆலை வெடி விபத்து
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Jul 2025 08:08 AM

ஹைதராபாத், ஜூலை 01 : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்  (Hyderabad Chemical Factory Blast) உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சங்கரெட்டி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த ஆலையில் மருந்துகள் தயாரிப்பதற்காக ரசாயன மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரசாயன ஆலையில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஜூன் 30ஆம் தேதியான நேற்று ரசாயன ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த ஆலையில் தீப்பிடித்த ஏரிந்தது.

பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பலரும் அலறி அடித்து ஓடினர்.

மேலும், சிலர் ஆலையிலே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய அமைச்சர் பேட்டி


இந்த விபத்து குறித்து பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து, அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களுக்கு 08455276155 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்த விபத்து குறித்து காரணங்களை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி வேதனை தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.