Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருப்பி அடிக்குமா இந்தியா? பதற்றத்தில் அமெரிக்க நிறுவனங்கள்.. வரியால் நடக்கும் குழப்பங்கள்!

American Goods Boycott | இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா மீண்டும் 25 சதவீதம் உயர்த்தியது இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாபா ராம் தேவ் இந்திய பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பி அடிக்குமா இந்தியா? பதற்றத்தில் அமெரிக்க நிறுவனங்கள்.. வரியால் நடக்கும் குழப்பங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Aug 2025 09:14 AM

டெல்லி, ஆகஸ்ட் 31 : இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனாட்ல்  டிரம்ப் (American President Donald Trump) 50 சதவீதம் இறக்குமதி வரி (50% Tariff on India) விதித்துள்ள நிலையில், அது இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் உள்ள அமெரிக்கா நிறுவனங்களான கேஎஃப்சி (KFC), மெக்டோனல்ஸ் (Mcdonald’s), டோமினோஸ் (Dominos) உள்ளிட்ட உணவனங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா மீது இரண்டாவது முறையாக வரி விதித்த அமெரிக்கா

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அந்த நாடுகள் அமெரிக்கா மீது எவ்வளவு வரி விதிக்கின்றனவோ அதே அளவுக்கு வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து உலக நாடுகளுக்கு வரி விதித்த அவர் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குற்றம்சாட்டி மீண்டும் இந்தியா மீதான வரியை உயர்த்தினார். அதன்படி, தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : ‘வாருங்கள்.. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க கூறிய பாபா ராம்தேவ்

இந்தியா மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தை எதிர்த்து இந்தியா தரப்பில் கடுமையான கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அது குறித்து பேசியுள்ள பாபா ராம்தேவ், அமெரிக்க நிறுவனங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டும். கேஎஃப்சி, மெக்டோனல்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கு ஒரு இந்தியர் கூட செல்லக்கூடாது. மிகப்பெரிய புறக்கணிப்பை ஏற்படுத்த வேண்டும். இது நடந்தால் அமெரிக்காவில் குழப்பம் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 2 நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு.. முக்கிய தலைவர்களுடன் மீட்டிங்!

ஏற்கனவே பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களை புறக்கணித்து வருகின்றன. அந்த பட்டியலில் இந்தியாவும் இணையும் நிலை உருவாகியுள்ளது. முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.