‘வாருங்கள்.. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
PM Modi Speech in India-Japan Economic Forum : ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உற்பத்தி செய்ய வாருங்கள் என முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

ஜப்பான், ஆகஸ்ட் 29 : இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி (PM Modi Japan Visit) 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று காலை ஜப்பான் சென்றார். டோக்கியோ விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேதங்கள் முழங்க அவருக்கு ஜப்பான்னிய மக்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், இந்திய வம்சாவளியினருடனும் அவர் பேசினார். தொர்ந்து, இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதார நிலைத்தன்மை குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் பேசுகையில், “உலகம் இந்தியாவை மட்டும் பார்க்கவில்லை, இந்தியாவை நம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.




மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை பல்வேறு தொழில்களில் ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது. இன்று, இந்தியா அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, கொள்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
Also Read : திருப்பூர் டூ ஐடி துறை .. அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு இவ்வளவு பாதிப்பா?
”உலகம் இந்தியாவை நம்பியுள்ளது”
#WATCH | “The world is not just watching India, it is counting on India,” says PM Modi at India-Japan Economic Forum in Tokyo.
(Video source: DD) pic.twitter.com/wAJnSKI9f4
— ANI (@ANI) August 29, 2025
மிக விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொளாதார நாடாக மாறும். ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியும். ஆட்டோமொபைல் துறையில் எங்கள் (இந்தியா – ஜப்பான்) கூட்டாண்மை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
பேட்டரிகள், ரோபாட்டிக்ஸ், செமிகண்டெக்டர் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் நாம் வெற்றியை பெற்றுள்ளோம். உலகளாவிய தெற்கின், குறிப்பாக ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு நாம் பங்களிக்க முடியும். அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். வாருங்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்.
Also Read : எவ்வளவு அழுத்தம் வந்தாலும் நம் பலம் அதிகரிக்கும்.. டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி!
உலகத்திற்காக உற்பத்தி செய்யுங்கள். கடந்த பத்தாண்டுகளில், அடுத்த தலைமுறை இயக்கம் மற்றும் தளவாட உள்கட்டமைப்பில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜப்பானின் ஒத்துழைப்புடன், மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தில் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் நமது பயணம் இத்துடன் நிற்கவில்லை. ஆசியாவின் வளர்ச்சிக்கு இருநாடுகளின் வளர்ச்சி முக்கியம்” எனக் கூறினார்.