Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2 நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு.. முக்கிய தலைவர்களுடன் மீட்டிங்!

PM Modi Japan Visit : பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றிருக்கிறார். டோக்கியாவுக்கு வந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் அந்நாட்டு முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு..  முக்கிய தலைவர்களுடன் மீட்டிங்!
ஜப்பான் சென்ற பிரதமர் மோடிImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Aug 2025 07:57 AM

டெல்லி, ஆகஸ்ட் 29 :  இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி (PM Modi Japan Visit), 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று இரவு ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அழைப்பின்பேரில், பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். டோக்கியோவில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டோக்கியோ விமான நிலையத்தில் முக்கிய தலைவர்கள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து, ஜப்பானிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை காயத்ரி மந்திரம் மற்றும் பிற மந்திரங்களைச் சொல்லி வரவேற்கிறார்கள். மேலும், டோக்கியோவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை இந்திய புலம்பெயர்ந்தோர் வரவேற்றதோடு, அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி இருந்து முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்ததை நடத்த உள்ளார். 2025 ஆகஸ்ட் 29,30ஆம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி இருப்பார். அங்கு 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று கலந்து கொள்கிறார். அந்த மாநாட்டில் அவரை உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறதுதொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Also Read : திருப்பூர் டூ ஐடி துறை .. அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு இவ்வளவு பாதிப்பா?

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி


ஜப்பான் இந்தியா இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளனஅடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவுடனான இருதரப்பு வணிகத்தை அதிகரிக்க ஜப்பான் 68 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.   

ஜப்பான் பயணம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும் ஜப்பானும் தங்கள் வளர்ச்சி ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் பிறருடனான சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன்.

Also Read : எவ்வளவு அழுத்தம் வந்தாலும் நம் பலம் அதிகரிக்கும்.. டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி!

இதன் மூலம் ஏற்கனவே உள்ள கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என பதிவிட்டு இருந்தார். 2014 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து பிரதமர் மோடியின் எட்டாவது ஜப்பான் பயணமாகும்.   இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023-24 ஆம் ஆண்டில் 22.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இது 2024ஆம் ஆண்டு வரை 43.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.