Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி

Supreme Court On TET Exam : ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி
உச்ச நீதிமன்றம்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Sep 2025 13:40 PM

டெல்லி, செப்டம்பர் 01 : ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligibility Test) கட்டாயம் என உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெறாவிடில் வேலையைவிட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மாநில அரசின் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலமே ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். தற்போது தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்படுகிறார்க்ள.

இந்த தேர்வை 2011ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இதற்கிடையில், தான், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதாவது, அரசு உதவி பெறும் தனியால் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

Also Read : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 11 நாட்கள் காலாண்டு விடுமுறை.. தேர்வு அட்டவணையும் வெளியீடு!

ஆசிரியர்  பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம்

இந்த வழக்கில் பல கட்ட விசாரணைகள் நடந்த நிலையில், 2025 செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதாவது, ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருப்பவர்களுக்கு இது விலக்கு அளிக்கப்படுகிறது.

அவர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்படுகிறது. மற்றப்படி, ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வு எழுத வேண்டும். இல்லையெனில் அவர்கள் வேலையை விட்டு விலகலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

Also Read : நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி? கட் ஆஃப் விவரம் இதோ

சிறுபான்மை நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அரசு கட்டாயமாக்க முடியுமா, அது அவர்களின் உரிமைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து வேறு அமர்விற்கு பரிந்துரைக்கப்பட்டது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி என தெரிவித்துள்ளனர்.