Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதுவரை 28,250 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி – சென்னை மாநகராட்சி சொல்லும் டேட்டா..

Rabies Vaccination: சென்னை மாநகராட்சி தரப்பில் அந்தந்த தெருக்களுக்கே மருத்துவக் குழுக்கள் சென்று தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 28,250 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி – சென்னை மாநகராட்சி சொல்லும் டேட்டா..
ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Sep 2025 22:44 PM

சென்னை, செப்டம்பர் 3, 2025: சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி தரப்பில் தெருநாய்கள் இருக்கும் இடத்திற்கே சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெருநாய்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதே சமயம், பொதுமக்களை தெருநாய்கள் தாக்கும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவருமே கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

“தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தகுந்த தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தரப்பில் சென்னை நகரின் அனைத்து தெருக்களிலும் இருக்கும் நாய்களுக்கு எதிராக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

ரேபிஸ் தடுப்பூசி திட்டம்:

இந்தத் திட்டம் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 50 நாட்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரேபிஸ் நோய் என்பது நாய், பூனை, வௌவால் உள்ளிட்ட பல பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு உமிழ்நீரின் மூலம் பரவும் உயிருக்கு ஆபத்தான ஒரு வைரஸ் நோயாகும். ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இது உயிரைப் பறிக்கும் அளவிற்கு ஆபத்தானது. எனவே, ரேபிஸ் எதிரான தடுப்பூசி மிகவும் அவசியமான ஒன்றாகும். நோய் கட்டுப்பாட்டை நோக்கி மாநகராட்சி எடுத்து வரும் இந்த தடுப்பூசி நடவடிக்கை மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு..

28,250 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி:


இதில் முக்கியமாக, சென்னை மாநகராட்சி தரப்பில் அந்தந்த தெருக்களுக்கே மருத்துவக் குழுக்கள் சென்று தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாளம் வைக்கப்படுகிறது.

மேலும் படிக்க: மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!

இந்நிலையில், சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அதன் X வலைதளப் பக்கத்தில் (முன்னாள் ட்விட்டர்) வீடியோவுடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இந்த பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.