Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காங்கிரஸ் எம்.பிக்கு என்னாச்சு? சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி… பின்னணி என்ன?

Tiruvallur MP Sasikanth Senthil : திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பிக்கு என்னாச்சு? சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி… பின்னணி என்ன?
சசிகாந்த் செந்தில் எம்.பிImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 Aug 2025 10:42 AM

சென்னை, ஆகஸ்ட் 31 :  திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் (MP Sasikanth Senthil) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி உண்ணவிரதம் போராட்டத்தை நடத்திய அவர், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், தனது போராட்டம் தொடரும் எனவும் சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வலியுறுத்தி உள்ளார்கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையே பிரச்சை நிலவி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

உண்ணாவிரத போராட்டம்

ஆனால், தமிழக அரசோ, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் கூறி வருகிறது. இருப்பினும், தமிழக அரசு தொடர்ந்து பிரதமர் மோடி கடிதம் வாயிலாக கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கல்வி நிதி வழங்க வலியுறுத்தி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகிசாந்த் செந்தில் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போடு, நேற்று மாலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

Also Read : வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம்.. போலீஸ் வழக்குப்பதிவு!

உண்ணாவிரதம் காரணமாக, அவருக்கு உடல் சோர்வு, குறைந்த ரத்த அழுத்தம், நீரிழிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் உடனே திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக கூறினர்.

சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், “எனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, உயர் இரத்த அழுத்தத்தால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான் நலமாக இருக்கிறேன்என பதிவிட்டார்.

Also Read : 1000 மரங்கள் நட்டால் இறுதி சடங்கில் அரசு மரியாதை – மரங்களின் மாநாட்டில் சீமான் பேச்சு

தொடர்ந்து, “தமிழ்நாடு மாணவர்களுக்காக நிதி கேட்டு மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டம் தொடரும்என பதிவிட்டு இருக்கிறார்இதற்கிடையில், சசிகாந்த் செந்தில் தனது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நேரத்தில், சகிகாந்த் செந்தில் போராட்டம், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடும் எனவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.