Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கல்வி நிதி விவகாரம்.. மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

Three Language Policy : சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைகை செயல்படுத்தாததால், கல்வி நிதியை நிறுத்தி வைப்பது சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி நிதி விவகாரம்.. மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
உச்ச நீதிமன்றம் - தமிழக முதல்வர் ஸ்டாலின்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 May 2025 09:10 AM

டெல்லி, மே 21 : தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை (Education fund) உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை (National education policy) ஏற்றால் தான் ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், பிஎம் ஸ்ரீ, அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என மனுவில்  தமிழக அரசு கூறியிருக்கிறது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான ரூ.2,291 நிதியை மத்திய அரசு வழங்கு மறுத்து வருகிறது. இதனால், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பலமுறை கல்வி நிதி கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு வலியுறுத்தப்பட்டது.

கல்வி நிதி விவகாரம்

இருப்பினும், மத்திய அரசு தமிழகத்திற்கான கல்விநிதியை வழங்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கான கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறி வருகிறது.   பிஎம்ஸ்ரீ திட்டம் புதிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கல்வி நிதி வழங்கப்படும் என  மத்திய  அரசு கூறியிருக்கிறது.

எனவே, புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான், தமிழகத்திற்கான நிதி வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. ஆனால், மும்மொழிக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழக அரசு குற்றச்சாட்டி வருகிறது.

இதனால், எந்த காலத்திற்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் மூம்மொழிக் கொள்கையை ஏற்றால் இடைநிற்றல் அதிகரிக்கும் என தமிழக அரசு கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு கல்வி நிதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு


அதாவது, சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6 சதவீத வட்டியுடன் ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தள்ளதால் மாணவர்கள்  கடும் பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் கூட முதல்வர் ஸ்டாலின், ”மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்றடைய வேண்டிய நிதி, அற்ப அரசியல் காரணமாக மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றதை அணுகுவோம். மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள் தொடர்பான பல வழக்குகளில் தமிழ்நாடு சமீபத்தில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுள்ளது. எனவே, இந்த வழக்கும் தனக்கு சாதகமாக இருக்கும்” என கூறியிருந்தார்.

 

தென்காசி பேருந்து நடத்துனர் கொலை: கொலைக்கு கள்ளக்காதல் காரணமா?
தென்காசி பேருந்து நடத்துனர் கொலை: கொலைக்கு கள்ளக்காதல் காரணமா?...
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்? கவலைப்பட வேண்டாம்.!
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்? கவலைப்பட வேண்டாம்.!...
மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி மனு!
மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி மனு!...
மதுபோதையில் விபத்து.. நடுரோட்டில் காவலர் தீக்குளித்து தற்கொலை
மதுபோதையில் விபத்து.. நடுரோட்டில் காவலர் தீக்குளித்து தற்கொலை...
மத நல்லிணக்கத்தை போற்றும் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
மத நல்லிணக்கத்தை போற்றும் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா...
மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி... விஷாலின் அடுத்தப் பட அப்டேட் இதோ
மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி... விஷாலின் அடுத்தப் பட அப்டேட் இதோ...
ரூ.1850 இருந்தால் போதும்..! சென்னை டூ புதுச்சேரிக்கு சுற்றுலா...
ரூ.1850 இருந்தால் போதும்..! சென்னை டூ புதுச்சேரிக்கு சுற்றுலா......
ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்கள்... பல்லாவரத்தில் பரபரப்பு
ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்கள்... பல்லாவரத்தில் பரபரப்பு...
சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க!
சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க!...
அன்புமணியுடன் மனக்கசப்பா? உண்மையை உடைத்த ராமதாஸ்
அன்புமணியுடன் மனக்கசப்பா? உண்மையை உடைத்த ராமதாஸ்...
சத்தீஸ்கர் துப்பாக்கிச்சூடு: 28 மாவோயிஸ்டுகள் பலி.. நடந்தது என்ன?
சத்தீஸ்கர் துப்பாக்கிச்சூடு: 28 மாவோயிஸ்டுகள் பலி.. நடந்தது என்ன?...