Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெண்டிலேட்டர் சிகிச்சையில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் சொன்னது என்ன?

Nallakannu Health Update: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் முழுமையாக வெண்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வெண்டிலேட்டர் சிகிச்சையில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் சொன்னது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Aug 2025 13:39 PM

சென்னை, ஆகஸ்ட் 29, 2025: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2025 ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமிழகத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு வீட்டில் திடீரென கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மூத்த தலைவர் நல்லகண்ணு செயற்கை சுவாசத்தில் (வென்டிலேட்டர்) உள்ளார்; அவரை மீட்டுக் கொண்டுவர மருத்துவர்கள் போராடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

வெண்டிலேட்டர் சிகிச்சையில் நல்லகண்ணு:

இது தொடர்பாக பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
“2025 ஆகஸ்ட் 22 ஆம் தேதி நல்லகண்ணு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமும் கைவிரலில் காயமும் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டதில், தலையில் பெரிதாக காயம் இல்லை என தெரிவித்தனர். 2025 ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 24 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவருக்கு நுரையீரலில் சிறுசிறு உணவுப் பொருட்கள் இருப்பதால் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டது.

மேலும் படிக்க: நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு? நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அப்போலோ மருத்துவமனையிலும் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் முழுமையாக வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார். எனவே அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக மருத்துவர்கள் போராடி வருகின்றனர்” என தெரிவித்தார்.

நல்லகண்ணு உடல்நிலை – தலைவர்கள் நேரில் விசாரணை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு வயது 100 ஆகும். அவர் கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். அடிக்கடி அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் இந்த முறை அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையும், நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தவெக கூட்டணிக்கு நோவா? பிரேமலதா சொன்ன முக்கிய பாயிண்ட்.. விஜய்க்கு அட்வைஸ்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் நல்லகண்ணுவிற்கு பலரும் நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “அவர் நிச்சயம் மீண்டு வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.