மூளையைத் தின்னும் அமீபா.. தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? அமைச்சர் பரபர விளக்கம்!
Brain Eating Amoeba Cases : அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், அதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சென்னை, ஆகஸ்ட் 28 : மூளையை தின்னும் அமீபா பாதிப்பு (Brain Eating Amoeba Cases) என்பது தொற்றுநோய் அல்ல எனவும் இது பரவும் தன்மை கொண்டது அல்ல எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மாசடைந்த நீர்நிலைகளில் குளிக்கும்போது மூளையை தின்னும் அமீபா பாதிப்பு ஏற்படுகிறது என்றும் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 9 வயது சிறுமி மூளையை தின்னும் அமீபா நோயால் உயிரிழந்தார். 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி காய்ச்சல் காரணமாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசடைந்ததால், 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மூளையை தின்னும் அமீபா தொற்றால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
மூளையைத் தின்னும் ஆமீபா
அதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த பாதிப்பால் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து மருத்தவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கேரளாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளா முழுவதும் உள்ள கிணறுகள் குளோரினேட் செய்து வருகின்றனர்.
Also Read : ’திருப்பூர் ஜவுளித்துறை பாதிப்பு.. நடவடிக்கை தேவை’ மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்




மேலும் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் 2025 ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சுத்தம் செய்யப்படும் என கூறியுள்ளனர். கிணறுகள், சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டிகள், மாசுபட்ட குளங்கள் மற்றும் ஆறுகளில் அமீபா இருப்பதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே, இதுபோன்ற நீர்களில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
இதற்கிடையில், அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு, தமிழகத்தில் ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்தவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மூளையை தின்னும் அமீபா தொற்றால் மக்கள் அச்சப்பட வேண்டாம். மூளையை தின்னும் அமீபா என்பது பெரிய அளவில் பதட்டப்படும் நோய் கிடையாது.
Also Read : விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற சிறுவன்.. துடிதுடித்து பலியான சோகம்.. பெற்றோரே உஷார்!
அசுத்தமான நீர்நிலைகளில் குளிப்பதால் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீச்சல் குளங்களில் அடிக்கடி தண்ணீரை மாற்ற தூய்மையான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். மூளையை தின்னும் அமீபா பாதிப்பு என்பது தொற்றுநோய் அல்ல. இதனால், கேரளாவில் இருந்து வருபவர்களால் இந்த நோய் பரவும் என்ற அச்சம் யாருக்கும் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.